மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா
31ம் திகதி பதவியேற்பு
மலேசியாவின்
புதிய மன்னராக
சுல்தான் அப்துல்லா
தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும்
31ம் திகதி
பதவியேற்க உள்ளார்.
மலேசியா
நாட்டில் மன்னரின்
முடியாட்சியின்கீழ், கூட்டாட்சி முறையிலான
அரசியல் சட்டம்
நடைமுறையில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு
முறை மன்னர்
தேர்ந்தெடுக்கப்படுகிறார். மன்னரின் தலைமையில்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதமர், துணைப்
பிரதமர் ஆகியோர்
அந்நாட்டின் ஆட்சியை நடத்தி, நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில்,
மலேசியா மன்னராக
கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற
மன்னர் ஐந்தாம்
சுல்தான் முஹம்மது,
தனது பதவிக்காலம்
முடிவதற்கு முன்பாகவே கடந்த 6-ம் திகதி
பதவி விலகினார்.
கடந்த
ஆண்டு மருத்துவ
விடுப்பில் சென்ற மன்னருக்கு, ரஷ்ய தலைநகரான
மாஸ்கோவில் ஒரு முன்னாள் அழகியுடன் திருமணம் நடந்ததாக
சமூக ஊடகங்களில்
புகைப்படங்கள் வெளியாகின. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும்
வகையில் மன்னரின்
ராஜினாமா அமைந்துள்ளதாக
கருதப்படுகிறது. ஆனால், இந்த வதந்திகள் தொடர்பாக
மன்னரின் அரண்மனை
வட்டாரங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
பல்லாயிரம்
ஆண்டுகாலமாக இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டு
இருந்துவரும் மலேசியாவில், 9 மாநிலங்களில்
அரச பரம்பரையினர்
ஆட்சி செலுத்தி
வருகின்றனர். இந்த மாநிலங்களில் உள்ள மன்னர்
குடும்பத்தில் உள்ளவர்கள், சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு
ஒருமுறை தெரிவு
செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர்.
அவ்வகையில்,
மன்னர் ஐந்தாம்
சுல்தான் முஹம்மது
பதவி விலகியதைத்
தொடர்ந்து, அடுத்த மன்னரைத் தேர்ந்து எடுப்பதற்கான
நடைமுறை நேற்று தொடங்கியது. இதற்காக நடைபெற்ற சிறப்பு
கூட்டத்தில், சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது
ஷா, புதிய
மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் நாட்டின்
16வது மன்னர்
ஆவார். புதிய
மன்னர் சுல்தான்
அப்துல்லா, ஜனவரி 31-ம் தேகதி பதவியேற்க
உள்ளார்.
விளையாட்டில்
அதீத ஆர்வம்
கொண்ட சுல்தான்
அப்துல்லா, உலக கால்பந்து அமைப்பான பிபா
உள்ளிட்ட பல்வேறு
விளையாட்டு அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருவது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.