கோத்தபாய தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு!
மகிழ்ச்சியில் ராஜபக்ஸ ரெஜிமென்ட்
முன்னாள்
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் கோரிக்கையை அமெரிக்கா
ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி
உள்ளது.
அமெரிக்க
குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கான விண்ணப்பத்தை அமெரிக்க
இராஜாங்க திணைக்களம்
ஏற்றுக் கொண்டுள்ளதாக
தூதரக தகவல்
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய
எதிர்வரும் ஒரு சில நாட்களில் கோத்தபாயவின்
அமெரிக்க குடிரிமையை
நீக்கிக் கொள்வதற்கான
வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும்
இரண்டு வாரங்களில்
தனது அமெரிக்க
குடியுரிமையை இரத்து செய்து கொள்ள முடியும்
என கோத்தபாய
ராஜபக்ஸ அண்மையில்
நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த
ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிடப் போவதாக கோத்தபாய அறிவித்துள்ளார். அதன் காரணமாக அமெரிக்க குடியுரிமையை
அவர் நீக்கிக்
கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோத்தபாயவின்
கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளமை
குறித்து ராஜபக்ஸ
ரெஜிமென்ட் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
0 comments:
Post a Comment