கூடிக் கலைந்தது காங்கிரஸ் உயர் அரசியல் பீடம்
தீர்மானம் நாளை 10.00 மணிக்கு அறிவிக்கப்படுமாம்
- ஏ. ஏச்.சித்தீக் காரியப்பர்
.எதிர்வரும்
ஜனவரி மாதம்
8 ஆம் திகதி
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது
என்பது தொடர்பிலான
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் அரசியல் உயர்பீடத்தின் கூட்டம் சற்று
நேரத்துக்கு முன்னர் முடிவடைந்துள்ளது.
இது தொடர்பான தங்களது தீர்மானத்தை நாளை (28) காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் மகாநாட்டில் வெளியிடப் போவதாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தங்களது தீர்மானத்தை நாளை (28) காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் மகாநாட்டில் வெளியிடப் போவதாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் பேச கால அவகாசம் கேட்ட
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடத்தின் கூட்டம் சற்று நேரத்துக்கு முன்னர் முடிவடைந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தான் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச வேண்டியுள்ளதாகவும் அதற்காக நாளை (28) காலை 9.00 மணி வரையும் கால அவகாசம் வழங்குமாறு அரசியல் உயர்பீடத்தைக் கேட்டுள்ளார். அத்துடன் இறுதித் தீர்மானத்தை தெரிவிக்கும் அதிகாரத்தையும் தனக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்தே இன்றைய கூட்டம் முடிவுக்கு வந்துள்ளதுடன் அதற்கான கால அவகாசமும் அரசியல் உயர்பீடத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸின் பல உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டுமென்றும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் இதன் காரணமாகவே இன்றும் இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment