அமெரிக்காவில்
பதவியேற்கும்
பார்வையற்ற முதல் நீதிபதி!
அமெரிக்காவின்
மிஷிகன் மாகாண
உச்ச நீதிமன்ற
நீதிபதியாக பார்வையற்ற ஒருவர் பதவியேற்கவுள்ளார்.
இன்னும்
சில தினங்களில்
அப்பதவியை ஏற்கவுள்ள
ரிச்சர்ட் பெர்ன்ஸ்டைன்
(41), இதன் மூலம் அந்த மாகாண உச்ச
நீதிமன்றத்தின் பார்வையற்ற முதல் நீதிபதி ஆகிறார்.
இதுகுறித்து
அவர் கூறியிருப்பதாவது:
எல்லோரையும்
போல, வழக்கு
விவரங்களை நானே
படித்துத் தெரிந்துகொண்டு
தீர்ப்பு வழங்குவது
எளிமையாக இருந்திருக்கும்.
பிறரது உதவியுடன்
படிக்கவும், எழுதவும் வேண்டியிருப்பதால்,
அதிக உழைப்பும்,
விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. இருந்தாலும்,
பள்ளிப் பருவத்திலிருந்தே
அது எனக்குப்
பழகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
அவரது
நியமனம் குறித்து
தலைமை நீதிபதி
ராபர்ட் யங்
கூறுகையில், ""நீதிபதி ரிச்சர்ட்
பெர்ன்ஸ்டைன் அடைந்துள்ள வெற்றி அசாதாரணமானது'' என்று
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment