அமெரிக்க 41 வது ஜனாதிபதி எச்.டபிள்யு. புஷ்

ஆஸ்பத்திரியில் அனுமதி

மூச்சுத்திணறல் அவதி காரணமாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி எச்.டபிள்யு. புஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் 90 வயதான இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் உறவினர்கள் கவலை அடைந்தனர்
ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல் தேறிய புஷ், ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். பின்னர், தனது 90-வது பிறந்தநாளை தனது மூத்த மகனும், முன்னாள் ஜனாதிபதியுமான ஜார்ஜ் டபிள்யு புஷ்சுடன் பாராசூட்டில் இருந்து குதித்து கொண்டாடினார்.

இந்த நிலையில் நேற்று திடீரென ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ்சுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலமாக டெக்சாஸ் மாகாணம், ஹாஸ்டனில் உள்ள மெத்தோடிஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top