கருவில் இருக்கும்போதே
அரிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்ட மூன்று பெண் குழந்தைகள்
தாயின்
கருவறையில் உயிர்பிழைக்க போராடிக்கொண்டிருந்த
மூவர்களை, கருவறையில்
இருக்கும்போதே ஆபத்து நிறைந்த அரிய அறுவை
சிகிச்சை செய்து
காப்பாற்றப்பட்டனர்.
நுட்பமான
அறுவை சிகிச்சை
செய்து மூன்று
பெண்களின் உயிர்களை
அறுவை சிகிச்சை
மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளார்கள்.
மூவர்களான
எய்லாஹ், எரின்
மற்றும் எல்சி,
அக்டோபர் மாதம்
பிறந்தனர், மூவர்களில் மிகச்சிறியவளான எல்சி, மிகவும்
சிறியதாக இருப்பதால்
சில மாதங்களுக்கு
மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு
மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மூவர்களில்
எய்லாஹ் மற்றும்
எரின் டிசம்பர்
மாத்திற்கு முன்னதாகவே வீட்டிற்கு கொண்டு செல்ல
அனுமதிக்கப்பட்டனர், ஆனால் எல்சி
மட்டும் மருத்துவமனையில்
ஆக்சிஜனில் வைக்கப்பட்டு -கிறிஸ்மஸ் தினத்தன்று பெற்றோர்களின்
மகிழ்ச்சிக்காக, வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டாள்.
மூவர்களின்
தாயான 26 வயதுடைய
லாரா ஸ்லிங்கர்,
எங்களது மூன்று
பெண்களும் ஆரோக்கியமாக
உள்ளனர் மற்றும்
இவர்கள் எங்களுக்கு
மிகச்சிறந்த கிறிஸ்மஸ் பரிசு என்றும் கூறுகிறார்.
மிஸ் ஸ்லிங்கர்,
17 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்றிருந்தார்,
அப்போது இரண்டு
குழந்தைகளுக்கு இடையே இரத்த விநியோக பிரச்சனை
இருப்பதை மருத்துவர்கள்
கண்டறிந்தனர்.
இந்த
மூவர்களில் இரண்டு பெண் குழந்தைகளான எய்லாஹ்
மற்றும் எல்சி
ஒரே மாதிரியான
உருவம் கொண்ட
இரட்டையர்கள். அவர்கள் இருவரும் நஞ்சுக்கொடியிலிருந்து இரத்தத்தை பகிர்ந்துகொண்டிருந்தனர்.
அதில் இரட்டையர்களில்
ஒருவருக்கு அதிகமான இரத்தத்தை பெறுக்கொண்டிருந்தார், அதனால் மற்றவருக்கு தேவையான சத்துக்கள்
கிடைக்காமல்போனது. இந்த நோயின்
பெயர் டிவின்
டூ டிவின்
ட்ரான்ஸ்ப்யூஷன் சின்ட்ரோம் (TTTS) அரிய வகையான நோய்
இருப்பதை கண்டறிந்து
சிகிச்சை செய்யப்பட்டது.
மிகச்சிறியவளான
எல்சி வளருவதில்
ஆபத்து இருந்தது,
அவளது எரின்
சகோதரியை விட
சிறியதாக இருந்தாள்.
அதனால் அவருக்கு
இதயம் வளருவதில்
சிரமம் ஏற்பட்டது.
அதனால் மூவர்களின்
பெற்றோர், ஒரே
மாதிரியான உருவம்
கொண்ட இரட்டையர்களின்
இரத்த வழங்குதலை
சிகிச்சை செய்து
பிரித்தால் நலமடைவர் என்ற நம்பிக்கை உள்ளது,
என்றாலும் இந்த
அறுவை சிகிச்சை
செய்தால் மூன்று
குழந்தைகளுக்கும் ஆபத்து இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
மூவர்களில்
தனிமையான எரின்,
நஞ்சுக்கொடியிலிருந்து இரத்தத்தை பகிர்ந்துக்கொள்வதில்
பாதிக்கப்படவில்லை, ஆனால் இந்த
அறுவை சிகிச்சை
செய்தால் கருவில்
உள்ள தொற்றினாலோ
அல்லது அறுவை
சிகிச்சையில் தவறு ஏற்பட்டாலோ அவளது உயிருக்கும்
ஆபத்து இருந்திருக்க
கூடும் என்று
மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று ஸ்லிங்கர் கூறியுள்ளார்¢.
ஒரே
மாதிரியான உருவம்
கொண்ட இரட்டையர்களின்
இரத்த வழங்கல்
பிரிக்க ஒரு
லேசர் பயன்படுத்தி,
தெற்கு லண்டனில்
உள்ள டூட்டிங்
நகரில் செயின்ட்
ஜார்ஜ் மருத்துவமனையின்
டாக்டரான அமர்
பிதே மூலம்
சிறப்பு அறுவை
சிகிச்சை நடத்தப்பட்டது.
இந்த மூன்று
பெண்களின் பெற்றோர்,
புதிய இரத்த
வழங்கல் சரியாக
வேலை செய்கிறதா
என்பதை அறிய
இரண்டு வாரம்
மருத்துவமனையில் காத்திருந்தனர்.
இந்த
ஆபத்தான அறுவை
சிகிச்சை செய்து
முடித்த ஆறு
மணி நேரத்திற்கு
பிறகு மூவர்களை
சோதனை செய்து
பார்த்தபோது இதயம் நன்றாக துடித்துக்கொண்டிருந்தது. இந்த அறுவை
சிகிச்சையில் மூவர்களில் ஒருவர் கூட உயிரிழக்காமல்
அனைவரும் நன்றாக
இருக்கிறார்கள் என்று கேள்விபட்டதும் எங்களுக்கு ஆச்சரியமாக
இருந்தது என்று
மூவர்களின் தந்தையான 29 வயதுடைய ஹாலிவல் கூறியுள்ளார்.
இந்த
மூவர்களும் கருவுறுதல் சிகிச்சை செய்யாமல் இயற்கையாக
உருவான பெண்
குழந்தைகள் ஆவர். இந்த அறுவை சிகிச்சை
முறை மூவர்களுக்குள்
செய்யப்படும் மிக அரிய சிகிச்சை ஆகும்.
0 comments:
Post a Comment