ஜனாதிபதித் தேர்தல் - 2015
தபால் மூல
வாக்களிப்பு இன்றும் நாளையும்
ஜனாதிபதி
தேர்தலை முன்னிட்டு
உத்தியோகபூர்வ அஞ்சல்மூல வாக்களிப்பு நாடு முழுவதும்
இன்றும், நாளையும்
நடைபெறவுள்ளது. இம்முறை
5 இலட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்கள் அஞ்சல் மூலம்
வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அஞ்சல்
மூல வாக்களிப்பு
நடத்தப்படும் அரச அலுவலகத்தின் பாதுகாப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன் வாக்காளர்கள் அடையாளமிடும்
சின்னம் பிறர்
அறியாத வகையில்
இரகசியமாக பேணப்படும்
எனவும் தேர்தல்கள்
ஆணையாளர் மஹிந்த
தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை
அஞ்சல் மூல
வாக்காளர்கள் வாக்களிக்கையில் அதற்கு தடையை அல்லது
அச்சுறுத்தலை செய்ய முயற்சித்தால் அவ்விடத்தின் வாக்கெடுப்பு
நிறுத்தப்படும் என அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அஞ்சல்
மூல வாக்களிப்பு
நடத்தப்படும் அலுவலகங்களுக்குள்ளோ அல்லது
வெளியிலோ தேர்தல்
சட்ட விதிமுறையை
மீறிச் செயற்படுவோர்களுக்கு
எதிராக கடும்
சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.முஹம்மட் கூறியுள்ளார். அந்த வகையில், வாக்களிப்பு
நடத்தப்படும் அரச அலுவலகத்தில் வேட்பாளரொருவரின் வேட்பாண்மையை ஊக்குவிப்பதற்கான
அச்சிடப்பட்ட உருவப்படம், பத்திரம், அடையாளம், இலக்கம்,
சின்னம் ஆகியவற்றை
காட்சிப்படுத்தல் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும்.
தவிர்க்க
முடியாத காரணத்தினால்
இன்றும் நாளையும்
வாக்களிக்க தவறியவர்கள் 30ஆம் திகதி தமது
அலுவலகம் அமைந்துள்ள
மாவட்ட தெரிவத்தாட்சி
அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment