அப்பா! எனக்கு நீங்கள் வேண்டும் திரும்ப வாங்க
ஏர்ஏசியா விமான
கேப்டன் மகள் உருக்கம்!
மாயமான
ஏர் ஏசியா
விமானத்தின் கேப்டன் இரியான்டோவின் மகள் ஏஞ்சலா
சமூக வலைதளத்தில்
அப்பா திரும்ப
வீட்டுக்கு வாருங்கள் என்று உருக்கமாகக் கேட்டுள்ளார்.
இந்தோனேசியாவில்
உள்ள ஜுவான்டா
சர்வதேச விமான
நிலையத்தில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய
ஏர் ஏசியா
விமானம் க்யூஇசட்8501
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாயமானது. இந்நிலையில்
விமானம் இந்தோனேசிய
கடலில் விழுந்துவிட்டதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேடல்
பணியும் துவங்கியுள்ளது.
விமானத்தை
இந்தோனேசியாவைச் சேர்ந்த இரியான்டோ ஓட்டினார். அவர் இதுவரை 6 ஆயிரத்து
100 மணிநேரம் விமானம் ஓட்டியவர் என அறிவிக்கப்படுகின்றது.
துணை விமானியான
பிரான்ஸைச் சேர்ந்த இம்மானுவல் ப்ளெசல் 2 ஆயிரத்து
275 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளவர்.
இந்நிலையில்
கேப்டன் இரியான்டோவின்
மகள் ஏஞ்சலா
சமூக வலைதளத்தில்
தெரிவித்திருப்பதாவது, 'அப்பா திரும்பி வந்துவிடுங்கள். எனக்கு நீங்கள் வேண்டும். என் அப்பாவை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அப்பா வாங்க நான் உங்களை பார்க்க வேண்டும்' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். கேப்டன் இரியான்டோவுக்கு மனைவி மற்றும்
பள்ளி செல்லும்
2 மகள்கள் உள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.