ஜனாதிபதியை தோற்கடிப்பதற்கு
மக்கள் வாக்களிக்க
வேண்டும்
ஜே.வி.பி
பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி
நாட்டில்
தற்போது உள்ள
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை முடிவு
செய்யும் வகையில்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவை தோற்கடிப்பதற்காக
மக்கள் அனைவரும்
ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று
மக்கள் விடுதலை
முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசார
செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்
ஜனவரி 8 ஆம்
திகதி நடைபெறவுள்ள
ஜனாதிபதி தேர்தலில்
தமது கட்சியின்
நிலைப்பாடு பற்றிய ஊடகவியலாளர் சந்திபொன்று
யாழ்.ஊடக
அமையத்தில் நேற்று 21 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது, அதில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியின்
பிரசார செயலாளர் விஜித ஹேரத் அங்கு
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ
தனது
இரண்டாவது ஆட்சி
காலத்தில் ஜனாதிபதி
முறமையை நீக்குவதாக தெரிவித்த போதும்,
அவர் அதனை
செய்யவில்லை 2010ஆம் ஆண்டு மீண்டும் நிறைவேற்று
அதிகாரத்தை பலப்படுத்தினார். அதுமட்டுமல்லாது
தனது குடும்ப
ஆட்சி மூலம்
நாட்டின் ஒட்டுமொத்த
பொருளாதாரத்தையும் தன்னகத்தே வைத்துள்ளார்.
இலங்கை
அரசியலமைப்புச் சட்டத்தின் படி 2 முறை மட்டும்
ஒருவர் ஜனாதிபதியாக
இருக்க முடியும்
என்ற முறைமை,
18 ஆவது திருத்தச்
சட்டத்தின் படி மாற்றப்பட்டுள்ளது.
இந்த
நிறைவேற்று முறைமை மூலம் ஜனாதிபதியின் குடும்ப
ஆட்சி மட்டுமன்றி
நீதித்துறை, நாடாளுமன்றம் அனைத்தும் மாற்றியமைக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில்
பஞ்சோந்தித்தனமான நாடாளுமன்றம் இல்லாமல், மக்களுக்கு சேவைகள்
செய்யக்கூடிய உறுப்பினர்களால் நிரப்பப்பட்ட
நாடாளுன்றம் உருவாக வேண்டும் என நாம் விரும்புகின்றோம்.
பயங்கரவாத
தடைச்சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் கைது
செய்யப்பட்டு 10 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து, மீனவர்கள்
என்ற போர்வையில்
இலங்கை வந்த
கஞ்சா கடத்தல்காரர்கள்
விடுதலை செய்யப்படுகின்றனர்.
ஆனால் தமிழ்
இளைஞர்கள் இன்னமும்
தடுப்பிலுள்ளார்கள்.
எனவே
மக்கள் விடுதலை
முன்னனியின் முடிவு, தேர்தலில் ஜனாதிபதி தோற்கடிக்கப்படவேண்டும்
என்பது ஆகும்.
தற்போது நாம்
மக்கள் மத்தியில்
இவ்வாறான விழிப்புணர்வையே
ஏற்படுத்தி வருகின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment