முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீம் அவர்களிடம்
ஒரு பணிவான வேண்டுகோள்...

Nagoor Ariff

எதிர்பார்க்கப்பட்ட முடிவாயினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பல்வேறு விதமான அழுத்தங்களுக்கு ( உள்ளேயும், வெளியேயும் ) முகம் கொடுத்துக்கொண்டே இந்த முடிவுக்கு வந்திருப்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இன்னும் முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் எதிர்பார்க்கப்பட முடியாத ஒன்றல்ல.
மாற்றம் அவசியம் என்பதை பலரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அது ஆட்சி மாற்றத்தோடு மட்டும் நின்று விட்டால் போதுமா?
எல்லோருமே சந்தர்ப்பவாதிகள் என்பதை எனது முன்னைய பதிவில் சொல்லியிருந்தேன். மக்கள் உட்பட......
முஸ்லிம் காங்கிரசின் கதை முடிந்து விட்டது...இனி அதன் தலைவராக வரவேண்டியவர் மன்னாரின் மைந்தன் தான் ...அவர் தான் நம் சமூகத்தின் காவலர்... என்றெல்லாம் இன்று நண்பகல் வரை சொன்னவர்கள் தான், முஸ்லிம் காங்கிரசின் முடிவை வரவேற்று பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தான் எனது முன்னைய பதிவில் சொல்லியிருந்தேன்....‘‘‘‘நேற்று தூற்றப்பட்டவன்...இன்று போற்றப்படுகிறான்.
இன்று போற்றப்படுகிறவன்...நாளை தூற்றப்படுவான்.
நேற்று காலின் கீழிருந்தவன்...இன்று தலையில் வைக்கப்படுகிறான்.
இன்று தலையில் வைக்கப்படுகிறவன்...நாளை காலின் கீழ் வைக்கப்படுவான்.
நேற்றைய Zero...இன்றைய Hero.
இன்றைய Hero... நாளைய Zero.‘‘‘‘
இது தானே நடக்கிறது...நடக்கப் போகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீம் அவர்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்...
கட்சியின் உள்ளே உங்களுக்கிருக்கும் அழுத்தங்களை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மக்கள் கண்டிருக்கிறார்கள். அந்த அழுத்தங்களை மக்கள் முன் தைரியமாகக் கொண்டு வாருங்கள். தேர்தலில் நிற்கின்ற அரசியல்வாதிகள் கட்சியின் பெயரில் தான் மக்களால் தெரிவு செய்யப்படுகிறார்களே தவிர, தத்தமது சொந்த பலத்தினால் அல்ல. ஒரு தடவை தெரிவு செய்யப்பட்ட பின் அதனைக் கொண்டு பலத்தைப் பெற முயற்சித்தாலும்...கட்சியின் பெயரில் தான் எல்லாமே. அப்படி யாராவது தத்தமது சொந்தப் பலத்தினாலே தான் நாங்கள் வெல்கிறோம் என்று சொல்வார்களாயின்...முடிந்தால் அடுத்த தேர்தலில் மரத்தில் ஏறாமல் வேறு ஏதாவதொன்றில் ஏறி அல்லது சுயமாக வென்று காட்டட்டும் தைரியமிருந்தால்.
தேர்தல்களில் தொடர்ந்தும் ஒரே வகையான முகங்களையே முன்னிறுத்தாமல் புதியவர்களுக்கும் வழிவிடுங்கள்.
தேர்தலை பணமுதலைகளின் மைதானமாக்காமல்...நேர்மைக்கும் இடம் கொடுங்கள். ஏனெனில், ஆரம்பத்தில் மார்க்கத்தை முன்னிலைப்படுத்தி வளர்ந்த கட்சி என்பதையும் மறுப்பதற்கில்லை.

முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை...மரணிக்கும் நேரத்தைத் தவிர....

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top