காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதியிலுள்ள
இரு பாலங்களும் அகலப்படுத்தப்பட்டு
உயர்த்தப்படல் வேண்டும். அரசியல்வாதிகள் நடவடிக்கை
எடுப்பார்களா?
காரைதீவு
– மாவடிப்பள்ளி பிரதான வீதியிலுள்ள பெரிய பாலம்
மற்றும் சிறிய
பாலம் இரண்டையும் உயர்த்தி
இப் பாலங்களுக்கூடாக
ஒரே நேரத்தில்
இரு வாகனங்கள்
சிரமமின்றி பயணிக்கக் கூடியவாறு அகலமாக்குவதற்கு அம்பாறை
மாவட்ட அரசியல்வாதிகள்
ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
இப் பிரதேச மக்கள்
கோரிக்கை விடுக்கின்றனர்.
இப்
பாலங்கள் இரண்டும்
மிகவும் குறுகியதாகவும்
ஒரே நேரத்தில்
இரு வாகனங்கள்
பயணிக்க முடியாமலும்
உள்ளன. இதுமாத்திரமல்லாமல்
மழை பெய்யும்
காலங்களில் சிறிய பாலம் வெள்ள நீரில்
அப்படியே மூழ்கி
பாதையில் வாகனப்
போக்கு வரத்துச்
செய்ய முடியாத
நிலையும் அடிக்கடி
ஏற்படுகின்றது. இதனால் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட
மக்கள் இப்பாதயினூடாக
போக்கு வரத்துச்
செய்வதற்கு பல சிரமங்களை அனுபவிப்பதுடன் உயிர்
ஆபத்துக்களையும் எதிர் நோக்குகின்றனர். இச் சிறிய பாலத்தை
உயர்த்துவதுடன் மாவடிப்பள்ளி எல்லையிலிருந்து காரைதீவு
சந்தி வரையும்
வீதியும் அகலப்படுத்தப்பட்டு
உயர்த்தப்படல் வேண்டும் என்ற வேண்டுகோளும் மக்களால்
விடுக்கப்படுகின்றது.
கல்முனையிலிருந்து
அம்பாறைக்கும் அம்பாறையிலிருந்து கல்முனை,
காத்தான்குடி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களுக்கும்
நாளாந்தம் பல
நூற்றுக் கணக்கான
லாரிகள் உட்பட
ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாலங்களினூடாகவே
பயணிக்க வேண்டியிருக்கிறது
எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில்
எத்தனையோ பாரிய
அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்
உயிருக்கு ஆபத்தை
உண்டுபண்ணும் இப் பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு உயர்த்தப்பட வேண்டியது அவசியமல்லவா?
அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளே இக் குறைபாட்டை
நிவர்த்திப்பதற்கு ஒன்றுபட்டு
செயல்படமாட்டீர்களா? என இப் பிரதேச மக்கள்
அரசியல்வாதிகளை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment