ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில்
40 உடல்கள் மீட்பு
உறவினர்கள் கண்ணீர்
காணாமல்
போன ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் 40 உடல்கள் ஜாவா கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக
தகல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து உடல்களை
மீட்கும் நடவடிக்கையில்
வீரர்கள் ஈடுபட்டு
வருகின்றனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
இதனை
ஏர் ஏசியா
தலைமை அதிகாரி
சுர்பையா மேயர்
ரிஷ்மகரினி டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். தனது
இரங்கல் செய்தியில்
, " அவர்கள் நம்மவர்கள் அல்ல. கடவுளுக்கு சொந்தமானவர்கள்”
எனவும் கூறியுள்ளார்
இந்த தகவலை கேட்டு
விமான விபத்தில்
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி
அழுதனர். இந்த
துயர சம்பவத்தால்
சிங்கப்பூர், இந்தோனேஷிய மக்கள் பெரும் சோகத்தில்
உள்ளனர். உறவுகளை
இழந்த மக்கள்,
கதறி அழும்
காட்சிகள் காண்போரை
நெஞ்சுருக செய்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
ஏர்
ஏசியா நிறுவனத்துக்குச்
சொந்தமான அந்த
விமானம் இந்தோனேசியாவின்
சுரபாயா நகரிலிருந்து
சிங்கப்பூருக்கு, உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு (இலங்கை நேரப்படி அதிகாலை
3.50 மணி) புறப்பட்டது.
இதில் 155 பயணிகள்,
விமானிகள் உள்பட
7 ஊழியர்கள் என மொத்தம் 162 பேர் இருந்தனர்.
பயணிகளில்
16 குழந்தைகள், ஒரு பச்சிளம் குழந்தை, பிரிட்டன்,
மலேசியா, சிங்கப்பூர்
ஆகிய நாடுகளைச்
சேர்ந்த பயணிகள்
தலா ஒருவர்,
கொரியா நாட்டைச்
சேர்ந்த மூவர்
இருந்தனர்.
இந்த
விமானம் புறப்பட்ட
சிறிது நேரத்தில்,
வானிலை காரணமாக
மாற்றுப் பாதையில்
பறக்க அனுமதி
கேட்டு விமானிகள்,
கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டனர்.
இந்நிலையில்,
புறப்பட்ட 42 நிமிடங்களில் விமானத்திலிருந்து
தகவல் துண்டிக்கப்பட்டு
மாயமானது. அந்த
விமானம் கடலில்
நொறுங்கி விழுந்ததை
ஆஸ்திரேலிய விமானிகள் உறுதி செய்தனர். மாயமான
ஏர் ஏசியா
விமானத்தைத் தேடும் பணியில் சுமார் 30 கப்பல்களும்,
15 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஈடுபட்டு
வந்தன.
இந்நிலையில்,
தொடர்ந்து நடத்தப்பட்ட
தேடுதல் வேட்டையில்
இந்தோனேசியாவின் ஜவா கடல் அருகே விமானத்தின்
சிதறிய பாகங்கள்
மிதப்பதாக அந்நாட்டு
விமான போக்குவரத்துத்
துறை தலைவர்
தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் ஏராளமான உடல்களும்
மிதப்பதாக கூறப்பட்டது.
இது
தொடர்பாக மாயமான
விமானத்தை தேடும்
பணியில் ஈடுபட்டுள்ள
ஹெர்குலிஸ் போர் விமானத்தின் லெப்டினன்ட் டிரை
விபோவை கூறுகையில்,
காலை 5மணி
நேர தேடுதல்
முயற்சிக்குப் பின்னர், கடலில் விமான பாகங்கள்
போன்றவை மிதப்பதை
கண்டுபிடித்தோம். விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் போர்னியோவின்
கரிமட்டா ஜலசந்தி
பகுதியில் மிதப்பதையும்
கண்டோம். எனத்
தெரிவித்துள்ளார். ஜாவா கடலின் பங்கலான்
பன் பகுதியில்
மிதப்பது ஏர்ஏசியா
விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் என்பது உறுதி
செய்யப்பட்டது.
இந்தோனேஷிய
மீட்புக் குழு
அதிகாரிகள் கூறும்போது ‘விமானம் காணாமல் போன
கடல் பகுதியில்
இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள்
கைப்பற்றப்பட்டு உள்ளன. அப்பகுதியில் இன்னும் உடல்கள்
மிதக்கின்றன. அவை நெருங்க முடியாத அளவிற்கு
உள்ளன. இந்த
உடல்களை மீட்பதற்கு
இந்தோனேஷிய கடற்படை கப்பல் வரவழைக்கப்பட்டு உள்ளது.
எனத் தெரிவித்துள்ளனர். என்று தகவல்கள்
வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment