சவூதி
அரேபியாவில் இராணுவ தாக்குதல்
4 ஆயுததாரிகள் பலி
சவூதி
அரேபியாவின் கிழக்கு பகுதியில் ஷியா பிரிவினரின்
ஆதிக்கம் நிறைந்த
அவாமியா கிராமத்தில்
சமீபத்தில் ஒரு பொலிஸ்காரரை ஆயுததாரிகள் சுட்டுக்கொன்றனர்.
இந்த நிலையில்
அந்த பகுதியில்
இராணுவம், நேற்று
முன்தினம் தேடுதல்
வேட்டையில் ஈடுபட்டது.
அப்போது,
இராணுவத்தினரை நோக்கி ஆயுததாரிகள், துப்பாக்கியால் சுட்டனர்.
உடனே இராணுவத்தினரும்
அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு
தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை
நடந்து. முடிவில்
4 ஆயுததாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த
தகவலை, அந்த
நாட்டின் உள்துறை
அமைச்சு உறுதி
செய்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment