இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற
பயணிகள் விமானம்
மாயம்..?
இந்தோனேசியாவிலிருந்து
சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயமாகியுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
மாயமான ஏர்
ஏசியா விமானத்தில்
162 பயணிகள் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. காலை 8
மணிக்கு சிங்கப்பூர்
சென்றடைய வேண்டிய
விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து மாயமான
விமானத்தை தேடும்
பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விமானம் வழக்கமான
பாதையில் இருந்து
விலகிச் சென்றதாக
அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மாயமான
ஏர்ஏசியா விமனத்தின்
எண்; QZ8501 என்றும் காலை 7;00 மணியை அடுத்து
விமான கட்டுப்பாட்டு
அறையின் தொடர்பில்
இருந்து விலகியது
என்றும் ஏர்
ஏசியா டூவிட்டரில்
தகவல் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுராபாயா நகரில் இருந்து சிங்கப்பூர்
நகருக்கு சென்ற
ஏர்ஏசியா விமானம்
கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை விட்டு விலகி
சென்றதை உறுதிசெய்வதில்
நாங்கள் மிகவும்
வருத்தம் அடைகிறோம்
என்று ஏர்ஏசியா
டூவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்
நோக்கி சென்ற
விமானம் ஜாவா
கடற்பகுதிக்கு மேல் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை
இழந்தது என்று
இந்தோனேஷியா போக்குவரத்து துறை அதிகாரி ஹாதி
முஸ்தபா செய்தியாளர்களிடம்
தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.