பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
முத்துஹெட்டிகம
சிங்கபூருக்கு பயணமானார்!
பிடியாணை
பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஸாந்த
முத்துஹெட்டிகம, பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலையத்தின், விசேட விருந்தினர்கள் வெளியேறும் வாயிலின்
ஊடாக வெளிநாட்டுக்கு
பயணமாகிவிட்டார் என்று அறிவிக்கப்படுகின்றது.
இன்று
வெள்ளிக்கிழமை அதிகாலை அவர், வெளிநாட்டுக்கு பயணமாகியுள்ளதாக
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இவர்,
காலி வதுருவ
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்றும்
அவரை கைது
செய்யுமாறு நீதிமன்றம், பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே அவர், வெளிநாட்டுக்கு பயணமாகியுள்ளார்.
வதுருவையில்
இடம்பெறவிருந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசார
கூட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை தாக்கி சேதப்படுத்தினர்
என்ற சந்தேகத்தில்
கைது செய்யப்பட்டு
பொலிஸில் தடுத்துவைக்கப்படிருந்த
மூவரை பொலிஸ்
நிலையத்துக்குள் சென்று பலவந்தமாக அழைத்துசென்றார் என்று
பிரதியமைச்சர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில்
அவருக்கு பாதுகாப்பு
வழங்கிய அமைச்சு
பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த மூவர், பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,
பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, தென் அதிவேக
நெடுஞ்சாலையின் ஊடாக கட்டுநாயக்கவுக்கு செல்வதாக பொது
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின்
சகோதரர், வியாழக்கிழமை
இரவு 10.56க்கு
119 என்ற பொலிஸ்
அவசர தொலைபேசி
இலகத்துக்கு தொடர்பு கொண்டு அறிவித்துள்ளார் என்றும்
தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில்,
கட்டுநாயக்க பொலிஸுக்கு அறிவிப்பதாக, அந்த அழைப்பை
எடுத்த பொலிஸ்
அதிகாரி தெரிவித்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த
நிலையில் பிரதி
அமைச்சர் நிஸாந்த
முத்துஹெட்டிகம தான் சிங்கப்பூர் சென்றதும் காலி
பிரதேச செய்தியாளர்
ஒருவருக்கு அழைப்பெடுத்து தான் மூன்று நாள்
விடுமுறையில் நண்பர்களுடன் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் தேர்தல்வரை அங்கு இருக்கப் போவதில்லை
என்றும் நீதிமன்ற
உத்தரவிற்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment