தமிழ் பேசும் மக்கள்
வாக்களிப்பு தினத்தன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம்.
7 மணி தொடக்கம் 10 மணிக்கு இடையில்
வாக்களிப்பை
நடத்தி முடித்துவிட வேண்டும்.
-
ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவர் மனோகணேசன்
நாடு
முழுக்க வாழும் தமிழ் மக்கள் ஜனவரி 8ஆம் திகதி காலை ஏழு மணிக்கும், பத்து மணிக்கும்
இடையில் தமது வாக்களிப்பை நடத்தி முடித்துவிட வேண்டும். எங்கள் தாமதம், தோல்வியில்
துவண்டு கொண்டிருக்கும் ஆளும் கட்சிக்குச் சட்ட விரோத வாய்ப்புகளைத் தந்து விடலாம்.
அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்.
இவ்வாறு
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பொது எதிரணியின்
பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.
அங்கு
மனோகணேசன் மேலும் தெரிவித்ததாவது: வாக்களிப்பு
தினத்தன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம். தாமதம் வேண்டாம். மாலை நான்கு மணிவரை வாக்களிப்புக்கான
வாய்ப்பு இருந்தாலும், நாம் நேர காலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமது நாட்டுக்கும்
நல்லது. இந்த ஆட்சிக் கொடுமையில் இருந்து
கொஞ்சமாவது மீண்டு தலை தூக்கவேண்டும். இன்றைய இறுக்கமான சூழலில் இருந்து கொஞ்சமாவது
மீள வேண்டும். துன்பப்படும் தமிழ் மக்களின் கோணத்தில் இருந்து பார்த்தால் தான் இந்த
உண்மை புரியும். எங்கள் அரசியல் சமூக வாழ்வில்
ஆரம்பித்து, எம் சமூக பொருளாதார வாழ்விலும் கைவைக்க இவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.
எமது நேர்மையான நியாயமான அரசியல் அபிலாசைகளை பிடுங்கினார்கள். நாம் என்ன தொழில் செய்ய
வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு எம் பொருளாதாரத்தில் கை வைத்தார்கள்.
இப்படியே போனால் நாம், நாளை நாம் வழிபடுவதற்கும், தொழுவதற்கும், பிரார்த்திப்பதற்கும்
இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டி வரும். இந்த
நிலைமையை இல்லாமல் செய்ய எம் முன் இருக்கும்
ஒரே வழி, அன்னப் பறவை சின்னத்துக்கு வாக்களித்து, இன்றைய ஆளும் கூட்டணியை தோற்கடிப்பது
தான் இவ்வாறு மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.