குத்துச்சண்டை
வீரர் முகம்மது அலி
மருத்துவமனையில் அனுமதி
மூன்றுமுறை
உலக சாம்பியன்
பட்டம் வென்ற
குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி நிமோனியா
நோய தாக்கப்பட்டதால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முகம்மது
அலி, ஏற்கெனவே
பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், அவருக்கு நிமோனியாவும் தாக்கியுள்ளது.
இது
குறித்து அவருக்கு
சிகிச்சை அளிக்கும்
மருத்துவர்கள் கூறியதாவது, "முகம்மது
அலிக்கு இலேசான
நிமோனியா தாக்கம்
ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. சிகிச்சைக்கு
அவர் உடல்
நல்ல ஒத்துழைப்பு
அளிக்கிறது. விரைவில் குணமடைவார்" என்றனர்.
1981-ல் குத்துச்சண்டை போட்டியில் இருந்து
ஓய்வு பெற்ற
அவர், அதன்பின்னர்
சமூக சேவையில்
தன்னை அர்ப்பணித்தார்.
0 comments:
Post a Comment