அமெரிக்கக் கூட்டுப் படை விமானத்தை சுட்டு
வீழ்த்தினர்
ஐ.எஸ். போராளிகள்
வீழ்த்தப்பட்ட ஜோர்டான் விமானத்தின் விமானியை பிடித்துச் செல்லும் ஐ.எஸ். போராளிகள். |
சிரியாவில்,
தங்கள் மீது
வான்வழித் தாக்குதல்
நிகழ்த்தி வரும்
அமெரிக்கக் கூட்டுப் படையைச் சேர்ந்த ஜோர்டான்
போர் விமானம்
ஒன்றை இஸ்லாமிய
தேச (ஐ.எஸ்.) போராளிகள்
புதன்கிழமை சுட்டு வீழ்த்தியதுடன். அந்த விமானத்திலிருந்து
குதித்த விமானியை
அவர்கள் சிறையும்
பிடித்தனர்.
இந்தத்
தகவலை ஜோர்டான்
அரசும், சிரியாவில்
இயங்கிவரும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு
அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கிடையே,
ஜோர்டான் விமானியை
போராளிகள் பிடித்துச்
செல்லும் காட்சிகள்,
வீழ்த்தப்பட்ட விமானத்தில் சிதறல்கள் ஆகியவற்றின் புகைப்படங்களை
இணையதளங்களில் ஐ.எஸ். போராளிகள் வெளியிட்டுள்ளனர்.
விமானத்திலிருந்து
வெளிவரும் வெப்பத்தைக்
கொண்டு, அதனைப்
பின்தொடர்ந்து தாக்கும் தொழில்நுட்பம் கொண்ட "ஹீட்
சீக்கிங்' ஏவுகணை
மூலம் ஜோர்டான்
விமானத்தை வீழ்த்தியாக
போராளிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவிலும்,
ஈராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். போராளிகளுக்கு
எதிராக, அமெரிக்கா
உட்பட பல்வேறு
நாடுகள் வான்வழித்
தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
ஐ.எஸ். வசமுள்ள
சிரியா பகுதிகளில்,
அமெரிக்காவுடன் இணைந்து ஜோர்டான் போர் விமானங்கள்
தாக்குதல் நிகழ்த்தி
வருகின்றன.
0 comments:
Post a Comment