பொத்துவிலைச் சேர்ந்த ஊடகவியலாளர்
ஏ.ஸி.அஹமட்லெப்பபை காலமானார்
பொத்துவிலைச்
சேர்ந்த பிராந்திய
ஊடகவியலாளர் ஏ.ஸி அஹமட்லெப்பபை நேற்றிரவு காலமானார்.
(இன்னாலில்லாஹி
வயின்னா இலைஹி
ராஜஊன் )
ஒரு
கால் மற்றும்
கை ஆகியன
செயற்படாமையினால் கடந்த ஒரு வார காலமாக
இவர், அம்பாறை
போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று
வந்தார்.
இந்த
நிலையில் நேற்றிரவு
11 மணியளவில் இவர் காலமாகியுள்ளார். இதனையடுத்து, இன்று
அதிகாலை இவரது
ஜனாஸா பொத்துவிலுக்கு
கொண்டுவரப்பட்டுள்ளது.
இவரது
ஜனாஸா நல்லடக்கம்
இன்று காலை
இடம்பெறும் என இவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
பொத்துவில்
பிரதேசத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் - தினரகன்,
இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் மற்றும் விடிவெள்ளி ஆகியவற்றின் பொத்துவில்
பிரதேச செய்தியாளராக
கடமையாற்றினார்.
இலங்கை
போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போவில் கடமையாற்றி
ஓய்வுபெற்றவர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.