ஒரு வருட காலமே ஆளுநராக பதவி வகிப்பேன்
அடுத்த வருடத்திற்குள்
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பேன்.
ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு


கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு இனி நிரந்தர தீர்வொன்று கிடைக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை எனக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடத்தில் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.

ஒரு வருட காலமே ஆளுநராக பதவி வகித்து விட்டு அடுத்த வருடத்திற்குள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பேன்.

மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் பல இன்னல்கள் கிழக்கில் காணப்படுகிறது. இதற்காக பூரண இதய சுத்தியுடன் கிழக்கின் நண்பனாக செயற்படுவேன்.

அரச அதிகாரிகளாக இருப்பினும் மிகவும் சுமூகமாக பழகக்கூடிய நல் எண்ணம் கொண்டு செயற்படுவேன்.

கிழக்கில் தொண்டராசிரியர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை சுகாதார ரீதியான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அனைத்தையும் உணர்ந்து இதற்கான நிரந்தர தீர்வொன்றை முன்வைத்து புதிய செயலணிகளை உருவாக்கி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

அரச அதிகாரிகளின் ஆதரவும் மக்களின் ஆதரவும் தேவை. அரச பணத்தில் தங்களுக்கான சம்பளம் பெற்றுத் தரப்படுகிறது. எனக்கும் இவ்வாறே கிடைக்கப்பெறுகிறது.

மக்களின் பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல கிழக்கில் இன முரண்பாடுகளற்ற சமுதாயத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் எனக்கு ஆளுநர் பதவியை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top