“ஜனாதிபதி அவர்களே நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமா?”

மைத்திரிக்கு எதிராக சிறுமியின் செயற்பாடு!
நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்



ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கும் வகையில் 14 வயதான சிறுமி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தான் தங்கியிருக்கும் இடத்தின் பிரச்சினையை தீர்த்து தனது ஊனமுற்ற தந்தை மற்றும் தாய்க்கு சுதந்திரமாக வாழ வழி ஏற்படுத்துமாறு குறித்த சிறுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சிறுமி அம்பாறை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி அவர்களே நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமா?” என்ற பதாகை ஒன்றையும் அவர் ஏந்தியிருந்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அம்பாறை நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவ்விடத்திற்கு வருகைத்தந்து இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அறிவித்துள்ளனர்.

இந்த சிறுமியின் தந்தை ஊனமடைந்த ஒருவராவார். அவரும் தாயும் தந்தையும் அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படை நிலையத்திற்கு அருகில் வீடு ஒன்றை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

எனினும் அந்த காணி வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமானதென கூறி குறித்த குடும்பத்தினர் அவ்விடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் குறித்த சிறுமியின் தாய்க்கு எதிராக வனவிலங்கு திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கமைய அவர் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த 7 நாட்களும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் குறித்த சிறுமி தனது தந்தையை பார்த்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தங்களுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் அவர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top