முதலில் மாகாணசபைத் தேர்தல்
தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு



முதலில் மாகாணசபைத் தேர்தல்களே நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் கூறினார்.

ஆறு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அவற்றுக்குத் தேர்தலை நடத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்றும்,  எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top