கல்முனையில் சொப்பிங் மோல்

இருப்பதையும் இல்லாமலாக்கிவிடக்கூடாது
அனுபவசாலிகளின் கருத்து

கட்டட வரைபட தயாரிப்புக்கே தற்போது  முகநூலில் அந்தக் கட்டடம் பூர்த்தியடைந்த நிலையில் உள்ளதான தகவல் போன்று பரபரப்பாக படங்கள் பதிவிடப்படுவது ஏனைய பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைகளைக் காணும் கல்முனைப் பிரதேச மக்களுக்கு ஆச்சிரியத்தையும் நகைப்பையும் ஏற்படுத்தும் விடயமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
கல்முனை பொதுநூலக அமைவிடத்தில் இந்த சொப்பிங் மோல் கட்டடம் அமைக்கப்படவுள்ளதாக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                                       
தற்போதுள்ள பொது நூலக கட்டடத்தை தரைமட்டமாக்கிவிட்டு அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை உள்ளடக்கியதாக குறித்த சொப்பிங் மோல் கட்டடம் அமையப்பெறவுள்ளதாகவும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனையில் கடந்தகாலத்தில் அறிவிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் வாய் மொழியாகவும் பத்திரிகைச் செய்திகளாகவும்  கலந்துரையாடல்களாகவும் இருந்தனவே தவிர செயல் வடிவத்தில் ஒன்றும் அமையப்பெறவில்லை என்பதை அறிந்து வைத்திருக்கும் மக்கள் கல்முனை பொது நூலக கட்டடத்தை தரைமட்டமாக்கிவிட்டு இருப்பதையும் இல்லாமல் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தை தெரிவிக்கின்றனர்.
குறித்த சொப்பிங் மோல் கட்டடம் அமைப்பதற்கான நிதி எங்கிருந்து பெறப்படும்? நிதி கிடைத்து விட்டதா என்ற தகவல் எதுவும் மக்களுக்கு தெரிவிக்கப்படாமல் வரைபட தயாரிப்பே அமர்க்களமாக உள்ளது.
சொப்பிங் மோல் கட்டடம் அமைப்பதற்கான நிதி உட்பட சகல உதவிகளையும் பெற்றுவிட்டோம் என்ற பின்னர்தான் பொது நூலக கட்டடம் தரைமட்டமாக்கப்படல் வேண்டும் என்பதே மக்களின் அபிப்பிராயமாகும்.
செய்யமுடியாததை சொல்லி இருப்பதையும் இல்லாமல் ஆக்கிவிடக்கூடாது என்பது கல்முனையில் உள்ள அனுபவசாலிகளின் கருத்தாகும்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top