கோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் சமல்
–ஜனாதிபதி வேட்பாளராக தானும் தயார் என்கிறார்
அடுத்த
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகநாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்
சமல் ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸ
சகோதரர்களில், மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல்
ராஜபக்ஸ, ஊடகவியலாளர்களிடம்
நேற்று பேசிய
போதே, இவ்வாறு
கூறியிருக்கிறார்.
“மக்கள்
தயார் என்றால்,
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக
கோத்தாபய ராஜபக்ஸ
கூறியுள்ளார்.
ஜனாதிபதி
பதவிக்கு நான்
பொருத்தமானவர் எனின், நானும் போட்டியிடுவதற்குத்
தயாராகவே இருக்கிறேன்”
என்று சமல்
ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸ
குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே பொதுஜன முன்னணியின்
வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்றும், அவர் யார் என்பதை
இப்போது வெளியிட
முடியாது எனவும்,
சில நாட்களுக்கு
முன்னதாக, சமல்
ராஜபக்ஸ கூறியிருந்தார்.
இதற்குப்
பின்னர், கோத்தாபய
ராஜபக்ஸ, ஜனாதிபதி
தேர்தலில் போட்டியிடத்
தயார் என்று
அறிவித்துள்ளதை அடுத்து, சமல் ராஜபக்ஸச, தானும்
தயாராக இருப்பதாக
தெரிவித்துள்ளார்.
சமல்
ராஜபக்ஸவின் இந்தக் கருத்து, ராஜபக்ஸ குடும்பத்துக்குள்ளேயே
ஜனாதிபதி பதவிக்கான
போட்டி, தீவிரமடைந்துள்ளது
என்பதையே, வெளிப்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment