பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து
140 பிரதான கூட்டங்கள்

கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்தவும் திட்டம்


எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை, ஆதரித்து நாடுபூராகவும் 140 பிரதான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.   இதில்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பிரதான கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது
இதேவேளை, கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பிரதான கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.    ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பொதுவேட்பாளரின் முதலாவது பிரசாரக் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி பொலனறுவையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், வடமத்திய மாகாணத்தை குறிவைத்து மஹிந்த ராஜபக்ஸவின் முதலாவது பிரசாரக் கூட்டமும் எதிர்வரும் 11 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top