ஊழல், இலஞ்சம் பட்டியலில்
இலங்கைக்கு 85 ஆவது இடம்

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படும் அதிக இலஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலின் 2014ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் இலங்கை 85ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
2013ஆம் ஆண்டில் 177 நாடுகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கை 91ஆவது  இடத்தைப் பிடித்திருந்தது.
175 நாடுகளை மையப்படுத்தியே 2014ஆம் ஆண்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.. இந்த பட்டியலின்படி, உலகிலேயே ஆகக் குறைந்த இலஞ்சம் பெறும் நாடாக டென்மார்க்கும் ஆகக்கூடிய இலஞ்சம் பெறும் நாடாக சோமாலியாவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியின், பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு ஆண்டு தோறும், ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் ஊழல் குற்றங்களின் அடிப்படையில், ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், ஊழல் குறைவான 175 நாடுகளின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இந்தப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அண்டை நாடுகளை பொருத்தவரை, கடந்த ஆண்டை விட சீனா 4 புள்ளிகள் குறைந்து 100வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. பாகிஸ்தானும், நேபாளமும் 126வது இடத்தில் உள்ளன. வங்கதேசம் 145வது இடத்தையும், பூடான் 30வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு 172வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.  எமது நாடான இலங்கை 85வது இடம் வகிக்கிறது.
சர்வதேச அளவில், 92 புள்ளிகளை பிடித்துள்ள டென்மார்க், ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகள் முறையே 2,3,4,5ம் இடத்தை பிடித்துள்ளன. இங்கிலாந்து (14), ஜப்பான் (15), அமெரிக்கா (17), துபாய் (25), மலேசியா (50), சவூதி அரேபியா(55), ரஷ்யா (136) ஆகியவை பட்டியலில் உள்ள குறிப்பிடத்தகுந்த நாடுகளாகும். கடைசி இடத்தில் 8 புள்ளிகளுடன் வடகொரியாவும், சோமாலியாவும் உள்ளன.

உலக வங்கி மற்றும் உலக பொருளாதார புள்ளிவிபரங்களை அடிப்படையாககொண்டே இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top