அவுஸ்திரேலியா சிட்னி ஓட்டலில்
பொதுமக்கள் சிறைபிடிப்பு!

அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள லிண்ட் கபே என்ற பிரபல ஓட்டலில் இருந்த பொதுமக்கள் மற்றும்  ஊழியர்களை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்திருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் வெளியானதும் பொலிஸாரும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் அங்கு விரைந்தனர். தொலைக்காட்சி சேனலில் காட்டப்பட்ட காட்சி ஒன்றில், ஓட்டலுக்குள் பிடிபட்டிருக்கும் பொதுமக்கள் சிலர் ஜன்னலோரம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் கைகளில் கறுப்புக்கொடி கொடுக்கப்பட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.
அந்தக் கொடியில், வெள்ளை நிறத்தில் அரபு மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, இது இஸ்லாமிய போராளிகள் அமைப்பான .எஸ்..எஸ்.-ன் செயலாக இருக்கலாமோ என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், அமைச்சரவை கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளார். ஓட்டலில் பிணைக்கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசித்து வருகிறார்.
சிரியா, ஈராக்கில் போராடி வரும் .எஸ்..எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவும் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதற்கு பதிலடியாக .எஸ். அமைப்பு இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஓட்டலில் ஊழியர்கள், பொதுமக்களை சிறைபிடித்து வைத்துள்ள மர்ம நபரை பொலிஸார் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பிணைக்கைதிகளை பிடித்துவைக்க காரணம் என்ன? அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஓட்டலில் இருந்து 5 பிணைக்கைதிகள் தப்பிவந்தனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகவலை, மெல்போர்ன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியா சிட்னி நகரத்தில்   பொது மக்களை ஆயுதம் தாங்கியவர்கள்  சிறைபிடித்து வைத்துள்ள சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவலை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலிய நேரப்படி இன்று  காலை 9.30 மணியளவில் ஆயுதம் தாங்கியவர்களால் பொதுமக்கள் பணயக் கைதிகளாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அவுஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்குமென அவரது டுவீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top