உலக அழகி பட்டம் வென்றார்

தென்னாப்பிரிக்காவின் ரோலென்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்ற 2014-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரோலென் ஸ்ட்ராஸ் பட்டம் வென்றார்.
24 வயதாகும் ரோலென், மிஸ் தென்னாப்பிரிக்கா பட்டத்தை வென்றவர். அவர் மருத்துவக் கல்லூரி மாணவியாவார்.ஹங்கேரியின் எடினா குல்சார் இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் எலிசபெத் சாப்ரிட் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இந்த உலக அழகி போட்டியை உலகம் முழுவதும் 100 கோடி பேர் தொலைக்காட்சி வழியாக கண்டு கழித்தனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 121 அழகிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். பட்டம் வென்ற ரோலெனுக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிலிப்பைன்ஸின் மிகன் யங், உலக அழகிக்கான கிரீடத்தை சூட்டினார்.
சுமார் 69 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் மீண்டும் உலக அழகி போட்டி நடைபெற்றது. நவம்பர் 20-ம் திகதி முதல் டிசம்பர் 14-ம் திகதி வரை நடைபெற்ற பல்வேறு சுற்றுகளில் நடை, பல்வேறு உடை அழகு, பேச்சு நளினம், மேக்கப், பொது அறிவு என போட்டிகளில் அழகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக உலக அழகி போட்டியில் பங்கேற்க பயணம் மேற்கொள்ள இருந்த அன்று ஹோண்டுராஸ் நாட்டு அழகி மரியா ஜோஷ் தனது சகோதரியுடன் சுட்டுக் கொல்லப்பட்டதால் இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எவ்வித இடையூறும் இன்றி உலக அழகி போட்டி நடைபெற்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top