மின்னல் நிகழ்ச்சி தொடர்பில்
மன்னார்.வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட

அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனம் கண்டனம்!

மஹாராஜா நிறுவன தலைவருக்கு கடிதங்களும் அனுப்பி வைப்பு!!

மன்னார்.வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனம் மின்னல் நிகழ்ச்சி தொடர்பில் தமது அதித கண்டனத்தை வெளியிட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக தனியார் தொலைக்காட்சியான சக்தியில் இடம் பெறும் மின்னல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஸ்ரீரங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் வலிந்து தேவையற்ற முஸ்லிம் ஒட்டு மொத்த சமூகத்தினையும் அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பிலேயே இந்த அமைப்புக்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி மஹாராஜா நிறுவன தலைவருக்கு பதிவுத்தபாலில் தனித் தனி கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பிலான செய்தியாளர் மாநாடு வவுனியா முஸ்லிம் கலாசார மண்டபத்தில் இன்று (2014.12.04) இடம் பெற்றது.இந்த மாநாட்டினை வவுனியா மாவட்ட அனைத்து பள்ளவாசல்களின் சம்மேளனம் எற்பாடு செய்திருந்தது.
வவுனியா மாவட்டத்துக்குட்பட்ட 20 பள்ளிவாசல்களின் சம்மேளனம் இந்த அறிக்கையில் கையொப்பத்தை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடக மாநாட்டில் கருத்துரைத்த மௌலவி மஹ்ருப் :-
இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஏனைய சமூகத்தினருக்கும் அநீதி இழைக்கப்படுகின்ற போது அவற்றுக்கு எதிராக பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் செயற்படும் ஒரு சிறந்த அமைச்சராக நாம் றிசாத் பதியுதீனை பார்க்கின்றோம். குறிப்பாக வடமாகாண மக்களுக்கு ஆரும் பெரும் பணிகளை ஆற்றிவரும் அமைச்சர் தொடர்பில் மின்னல் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ரீரங்கா அவதூறு சொல்வதை நாம் ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டோம். இந்த செயல் தொடர்பில் மஹாராஜா நிறுவனத் தலைவர் அவர்கள் கவனம் செலுத்துவதுடன் எதிர்காலத்தில் இவ்வாறன விடயங்கள் இடம் பெறாது இருக்க ஆவணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேற்பதாகவும் இங்கு கூறினார்.
இந்த விடயத்திற்கு சாதுவான பதில் கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என  ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,இதற்கு பதிலளித்த மௌலவி மஹ்ரூப் எமது அனைத்து சமூக அமைப்புக்களையும்,புத்தி ஜீவிகளையும் ஒன்று சேர்த்து நாடு தழுவிய முறையில் சில செயற்பாடுகளை முன்னெடுக்க நேரிடும் என்பதையும் இங்கு அவர் தெரிவித்தார்.
வவுனியா உஸ்மானிய்h பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி இங்கு கருத்துரைக்கையில் தெரிவித்ததாவது :-
வடக்கில் இன்று முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவருகின்றார்கள்.அவர்களின் இந்த பணியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேர்மையாக செய்துவருகின்றார்.யுத்தத்தால் அழிந்து போன இந்த பிரதேசத்திற்கான பாரிய அபிவிருத்திகளையும் அவர் செய்து வருகின்ற போது அவரது இந்த பணிகளை மழுங்கடித்து அவருக்கு எதிராக சேறு பூசி அரசியல் லாபம் தேடும் மின்னல் நிகழ்ச்சி தொடர்பில் நாம் எமது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.
எம்மில் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீள பெற்றுத்தருகின்ற போராட்டத்தில் வேறு எந்த அரசியல் தலைவர்களும் ஈடுபடவில்லை.இவ்வாறு இருக்கின்ற போது அவர்கள் தொடர்பில் பேசாதவர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை இழக்கு வைத்து ஸ்ரீரங்கா பேசுவதற்கு எந்த வித அருகதையும் இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றோம் என்றார்.
மன்னார் மாவட்ட ஜமியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி அஸீமும் இங்கு கருத்து தெரிவித்தார்.
2014.12.04
வவுனியா மாவட்ட பள்ளிவாசல்களின் ஒன்றியம்
வவுனியா.
துலைவர்
மஹராஜா நிறுவனம்
கொழும்பு
தங்களின் மேலான கவனத்திற்கு,
மின்னல் நிகழ்ச்சியும், திரு.ஸ்ரீரங்காவும்
தங்களது  நிறுவனத்தின் கீழ் இயங்கும் சக்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையில் இடம் பெறும் மின்னல்  நிகழ்ச்சி தொகுப்பாளர் திருவாளர் ஸ்ரீரங்கா அவர்கள் நீண்டகாலமாக  மின்னல் நிகழ்ச்சியினை நடத்திவரும் ஒருவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.கடந்த காலங்களாக இடம் பெற்றுவரும் மின்னல் நிகழ்ச்சிகளில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் கருத்துக்களும்,தனிப்பட்ட ஒருவரை நேரடியாக சாரும் வகையிலும் இடம் பெறுவது தொடர்பில் தங்களது கவனத்தை ஈர்க்கவிரும்புகின்றோம்.இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்பதை தங்களது இந்த மின்னல் நிகழ்ச்சி மூலம் உதாரணமாக கூறலாம்.
இந்த மின்னல் நிகழ்ச்சியின் கடந்தவார ஒளிபரப்பில் (2014.11.30) ஸ்ரீரங்கா அவர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான கௌரவ றிசாத் பதியுதீன் அவர்களையும்,அவரது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் அவரது குடும்பத்தினரரையும்; தனிப்பட்ட ரீதியில் அவமானப்படுத்தி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் விவாததினை நடத்திய விடயம் எம்மை குறிப்பாக வவுனியா மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் வெறுப்பையும்,கண்டனத்துக்குமுரியது என்பதையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் அவர்கள் இந்த கட்சியில் இருந்து வெளியேறியமை தொடர்பில் இடம் பெற்ற மின்னல் விவாதத்தின் போது தொகுப்பளார் ஸ்ரீரங்கா அவர்கள் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்து முஸ்லிம்களை அவமானப்படுத்தும் வகையில் தொடராக சில பொருத்தமற்ற கருத்துக்களை ஆழ பதிக்கும் வேலையினை செய்ததை நாம் இந்த ஒளிபரப்பின் போது அவதானித்தோம்.இது எமது முஸ்லிம் சமூகத்தின் நற்பெயருக்கு சேறு பூசும் ஒன்றாக பார்க்க நேரிட்டுள்ளது.பொறுப்பு வாய்ந்த சிறுபான்மை சமூகத்தின் விமோசனத்திற்கும்,விடிவுக்கும் என்று ஆரம்பிக்கப்பட்ட  சக்தி தொலைக்காட்சி சேவை இவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தங்களது நிறுவனத்துக்கு கிடைத்து வந்த நன்மதிப்பை இழந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
எதிர்காலத்தில் இவ்வாறான தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் சக்தி நிறுவனத்தை பயன்படுத்தி நிறுவனத்தின் நல்ல பெயருக்கு அபிகீர்த்தியினை ஏற்படுத்தாமல் அதனை பாதுகாப்பது தலைவராகிய உங்களின் பொறுப்பாக இருக்கும் என்பதைக் கெளரவமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.இவ்வாறான பொறுப்பற்ற நிகழ்ச்சி தொகுப்பாளரின் செயற்பாடுகளால் கடந்த 30 வருடகாலமாக அவலத்தை சந்தித்துவந்த வடக்கு முஸ்லிம்கள் தற்போது இடம் பெறும் மீள்குடியேற்றம்,மற்றும் அபிவிருத்திகளை அனுபவிக்க முடியா நிலைக்கு தள்ளப்டுவதற்கு காரணமாக அமைந்துவிடும் என்ற அச்ச உணர்வும் எம்மில் ஏற்படுத்தியுள்ளது என்பதை  சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனவே இவ்வாறான மின்னல் நிகழ்ச்சியினை தாங்களின் நேரடி கண்கானிப்பில் அவதானிப்பதுடன். இவ்வாறான ஒரே இனத்துக்குள் மோதலை தோற்றுவிக்கும் வகையில் இடம் பெறும் கலந்துரையாடலாக அல்லாமல் சமூகத்தினதும்,பிரதேசனத்தினதும் நன்மையினைக் கருத்தில் கொண்டு பெறுமதிவாய்ந்ததொன்றாக ஆக்கும் வகையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆலோசனையினையும் இதன் மூலம் எமது சம்மேளனம் முன்வைக்கவிரும்புகின்றது.
நன்றி

அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனம்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top