ஒருமணி நேரம் அனகோண்டாவின் வயிற்றில் இருந்து விட்டு

உயிருடன் வந்த வாலிபர்!


அனகொண்டா என்றாலே நமக்கெல்லாம் உதறல் எடுக்கும். ஆனால் 20 அடி நீளமும், 181 கிலோ எடையும் உள்ள அனகொண்டாவுக்கு ஒரு இயற்கை ஆர்வலர் தன்னையே விழுங்க தந்தார் என்றால் மயிர் கூச்செரியச்செய்கிறது அல்லவா?
அந்த அபூர்வ மனிதர், ரோசலி. அமெரிக்காவை சேர்ந்த இவர் வனவிலங்கு தொடர்பான ஆவணப்படங்கள் எடுப்பதில் வல்லவர்.
இந்த அனகொண்டாவை பிடிப்பதற்காக 60 நாட்கள் சதுப்பு நிலக்காடுகளில் முகாமிட்டு, பல நாட்கள் அனகோண்டாவைத் தேடி அலைந்த ரொசோலியும் அவரது குழுவும், இறுதியாக 20 அடி நீளமுள்ள பெண் அனகோண்டா ஒன்றைக் கண்டனர். பின்னர் அனகோண்டா விழுங்கும் போது உயிருடன் இருக்கும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார்பன் ஃபைபர் உடையை பால் ரொசோலி அணிந்துகொண்டார். அவர் அதன் அருகில் சென்ற உடனேயே அவரை விழுங்க அது முயற்சிக்கவில்லை. மாறாக ரொசோலியிடம் இருந்து தப்பிக்கவே அது முனைந்துள்ளது.
ரொசோலியோ தன்னை விழுங்கச்செய்வதற்காக அனகோண்டாவைக் கடுப்பேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அனகோண்டா அவரை விழுங்கியது. அனகோண்டா ரொசோலியை விழுங்கினாலும், வெளியில் உள்ள தனது குழுவினரை அவர் தொடர்பு கொள்ளும் வகையில் அவர் அணிந்திருந்த பிரத்யேக உடையில் அதற்கான கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.அதன் வழியே தனது குழுவினரை அவர் தொடர்பு கொண்டு பேசிய படியே இருந்தார். ஒரு கட்டத்தில் சிறிது பயந்தாலும் பின்னர் தைரியத்துடன் சுமார் ஒரு மணி நேரம் அதன் வயிற்றுக்குள் இருந்து உயிருடன் வெளியே வந்தார் ரொசோலியோ. அந்தப் பதட்டமான நிமிடங்கள் முழுவதும் ஈட்டன் லைவ் நிகழ்ச்சிக்காக படமாக்கப்பட்டது.முதலில் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சி டிசம்பர் 10 ஆம் திகதி பின்லாந்து, டென்மார்க், போலந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும், அதன் பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் ஒளிபரப்பாக இருக்கிறது.
அது சரி, ரோசலிக்கு பயமாக இல்லையா? “உண்மையிலேயே நான் பயப்படவில்லை. மக்கள் அதிர்ச்சியின் எல்லைக்கு செல்ல ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்ததுஎன்று தெரிவித்துள்ளார் இந்த மனிதர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top