மலாலாவுக்கு நாளை நோபல்
பரிசு வழங்கப்படுகிறது
இந்த
ஆண்டின் அமைதிக்கான
நோபல் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் சத்யார்த்திக்கும்,
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும் நாளை (டிச.
10) அந்தப் பரிசு வழங்கப்படவிருக்கிறது.நார்வே தலைநகர்
ஓஸ்லோவில் நடைபெறும்
பரிசு வழங்கும்
விழாவில் அவர்களிருவருக்கும்
நோபல் பதக்கம்,
நோபல் சான்றிதழ்கள்
ஆகியவை வழங்கப்படுகின்றன.
இவ்விருவருக்கும்
1.1 மில்லியன் அமெரிக்க டாலர் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
மலாலா
கூறும்போது, “இஸ்லாம் மதத்தில் எனக்கு மிகுந்த
நம்பிக்கையுள்ளது. இது அமைதிக்கான
மதம், ஆனால்,
துரதிர்ஷ்டவசமாக இந்த மதத்தைப் பற்றி அறியாமல்
சிலர் பல்வேறு
செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்றார்.
இலக்கியம்,
மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளில்
நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளோருக்கு ஸ்வீடன் தலைநகர்
ஸ்டாக்ஹோமில் நாளை நடைபெறவுள்ள விழாவில் பரிசளிக்கப்படும்.
0 comments:
Post a Comment