‘அனகொண்டா விழுங்குவதற்காக
தன்னையே தந்த ஒரு மனிதர்


அனகொண்டா என்றாலே நமக்கெல்லாம் உதறல் எடுக்கும். ஆனால் 26அடி நீளமும், 181 கிலோ எடையும் உள்ள அனகொண்டாவுக்கு ஒரு இயற்கை ஆர்வலர் தன்னையே விழுங்க தந்தார் என்றால் மயிர் கூச்செரியச்செய்கிறது அல்லவா?
அந்த அபூர்வ மனிதர், ரோசலி. அமெரிக்காவை சேர்ந்த இவர் வனவிலங்கு தொடர்பான ஆவணப்படங்கள் எடுப்பதில் வல்லவர்.
டிஸ்கவரி சேனலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பாகி, பரபரப்பை ஏற்படுத்தப்போகும் படத்தின் படப்பிடிப்புக்காகத்தான் அனகொண்டாவுக்கு, ரோசலி தன்னை விழுங்கக்கொடுத்தார்.
இந்த அனகொண்டாவை பிடிப்பதற்காக பெரு நாட்டின் மழைக்காடுகளில் 12 பேர் கொண்ட குழுவுடன் இவர் 60 நாட்கள் தங்கி இருந்தாராம். தண்ணீருக்கு அடியில் இருந்து இந்த அனகொண்டாவை 12 பேர் பிடித்து, சுமந்து கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். அதன்பின்னர்தான் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

அது சரி, ரோசலிக்கு பயமாக இல்லையா? “உண்மையிலேயே நான் பயப்படவில்லை. மக்கள் அதிர்ச்சியின் எல்லைக்கு செல்ல ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது என்று தெரிவித்துள்ளார் இந்த மனிதர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top