ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

ஏழுமலையானை தரிசித்துவிட்டு


இன்று நாடு திரும்புகின்றார்






ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று புதன்கிழமை அதிகாலை, சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்துவிட்டு  காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் இலங்கைக்கு திரும்புவார் என அறிவிக்கப்படுகின்றது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தனது குடும்பத்தினருடன் நேற்று 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை, ரேணிகுண்டா விமான நிலையத்தைச் சென்றடைந்தார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து ஹெலிபேட் மூலம், திருப்பதி என்.டி.ஆர் மைதானத்துக்கு சென்ற அவர், திருப்பதியிலிருந்து சாலை மார்கமாக திருமலைக்குச் சென்றார். திருமலைக்கு சென்ற அவரை, தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு அளித்து வரவேற்று, திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். இன்று புதன்கிழமை அதிகாலை, சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசிக்கும் அவர், அதையடுத்து காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் இலங்கைக்கு திரும்புவார் என அறிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் திருப்பதி வருகையை ஒட்டி, சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. சுமார் 500 கேரஹவுண்ட்ஸ் படையினர், வெடிகுண்டு அகற்றும் படையினர், மோப்ப நாய்ப் பிரிவு படையினர் என பலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வரக்கூடாது என மதிமுக, ஆந்திர விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் உள்ளிட்டோர் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும். அவர்களை பொலிஸார் கைது செய்து இரகசியமாக வைத்துள்ளனர் எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வருகையை முன்னிட்டு, திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சாதாரண பக்தர்கள் திருமலையில் உலவ தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று புதன்கிழமை, சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ளவுள்ளதால் அந்தச் சமயம் கோயிலுக்குள் அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top