முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத்
தீர்த்துவிட்டோம்!
மாலைகள் அணிந்து
எங்கள் பெருமையை
வெளிப்படுத்துகின்றோம்!!
நுரைச்சோலை வீட்டுத் திட்டம்
ஒலுவில் பிரதேசத்தில்_கடலரிப்பு
மாயக்கல்லி விவகாரம்
அம்பாறைப் பிரதேச மீனவர்களின் தொழிலில் ஏற்பட்டுள்ள சிக்கல்
பொத்துவில் பிரதேசத்திற்கு தனியான கல்வி வலையம்.
வட்டமடு காணிப் பிரச்சினை
ஆலிம்சேனை காணிப்பிரச்சினை
கல்முனை, சம்மாந்துறை புதிய நகர அபிவிருத்தி
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை
சம்மாந்துறை விவசாயிகளின் காணிப்பிரச்சினை
கல்முனையில் “தேசிய ரீதியில் மின்னொளியில் விளையாடக்கூடிய
வசதியுள்ள விளையாட்டு மைதானம் ...
இன்னும், இன்னும், இன்னும்..............
18 வருட கால முஸ்லிம் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ்
கிடைக்கப் பெற்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு அதிகாரங்களைக் கொண்டும் நாடாளுமன்ற
உறுப்பினர் பதவிகளைக் கொண்டும் முஸ்லிம் சமூகத்திற்கான பிரச்சினைகள் இதுவரை
முறையாக எங்களால் தீர்க்கப்படாவிட்டாலும் மக்களின் எதிர்ப்பு அலைகள்
வரும்போது அடிக்கடி இது சம்மந்தமாக
கூட்டங்கள் கூட்டுவோம்.
அதற்கான வரைபடங்களும் மாதிரிகளும் திரையில் காட்டுவோம். முஸ்லிம்
சமூகத்திற்கான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதிகளையும் முறையாக வழங்கிவிட்டோம்.
அந்த திருப்தியில் இப்படி மாலைகள் அணிந்து மகிழ்ச்சியாக எங்கள் சந்தோஷத்தை
திருப்தி அடைந்துள்ள முஸ்லிம் சமூகத்திற்கு வெளிப்படுத்துகின்றோம்.
இன்னும் பொன்னாடைகளையும் மாலைகளையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

0 comments:
Post a Comment