இலங்கை நிலவரம் குறித்து
ஐ.நா பொதுச்செயலாளர் கரிசனை
இலங்கை நிலவரங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்ரனியோ குரெரெஸ், அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக, ஐ.நா பொதுச்செயலாளரின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இலங்கையின் பிந்திய நிலவரங்களை, ஐ.நா பொதுச்செயலாளர் பாரிய கரிசனையுடன் கவனித்து வருகிறார்.
ஜனநாயக பெறுமானங்களை மதிக்குமாறும், அரசியலமைப்பு விதிகளையும், செயல்முறைகளையும் பின்பற்றுமாறும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்தை அவர் கோருகிறார்.
அனைத்து தரப்பினரும், கட்டுப்பாட்டுடனும், நெருக்கடியான நிலைக்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறும் அவர் கோருகிறார்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment