அர்ஜுன ரணதுங்க 5 இலட்சம் ரூபா பெறுமதியான
சரீரப் பிணையில் விடுதலை


சற்று முன்னர் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய தினம் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பாளர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top