மஹிந்த
தலைமையில் புதிய அமைச்சரவை!
அமைச்சராக
மாறும் ஜனாதிபதி
மீண்டும்
பாதுகாப்புச் செயலாளராகின்றார் கோத்தா?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ
தலைமையிலான 30 பேர் கொண்ட அமைச்சரவை நாளை சத்தியபிரமாணம் செய்யவுள்ளது.
அமைச்சரவை
உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.
30 பேர் அமைச்சரவையை
அமைக்க வேண்டுமெனின் நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை கொண்டு வர வேண்டும்.
இதனால் அமைச்சரவை நியமனத்தை இரண்டு நாட்களுக்கு பின்நகர்த்த யோசனை
முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிடைத்துள்ள
தகவல்களின்படி பந்துல குணவர்த்தன நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். அவரே
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சராக பதவியேற்கவுள்ளார். சட்ட மா அதிபர்
திணைக்களத்தையும் ஜனாதிபதி பொறுப்பேற்கவுள்ளார்.
இதேவேளை, புதிய
பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ
நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment