மஹிந்தவுக்கு வாழ்த்துக் கூறிய சீனத் தூதுவர்
ரணிலையும் சந்தித்தார்
புதிய
பிரதமராக நியமிக்கப்பட்ட
மஹிந்த ராஜபக்ஸவை, சீன தூதுவர்
சென் ஷியுவான்
இன்று மாலை
சந்தித்து வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
இதன்
போது, சீன
அரசாங்கத்தின் வாழ்த்துச் செய்தியை அவர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளார்.
நேற்று
மாலை மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்ட
பின்னர், அவருக்கு
வாழ்த்து தெரிவித்துள்ள
முதலாவது வெளிநாட்டுத்
தூதுவர் இவராவார்.
இதேவேளை,இலங்கைக்கான
சீனத் தூதுவர்
செங் ஷியுவான்,
ஜனாதிபதியால் நேற்றுப் பதவிநீக்கம்
செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இன்று மாலை
சந்தித்துக் கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இந்தச்
சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
புதிய
பிரதமராக நேற்று
நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸவை, அவரது
இல்லத்தில், சீன இராஜதந்திரிகளுடன் இணைந்து
சந்தித்துப் பேசிய பின்னரே, அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவை சீனத்
தூதுவர் தனியாகச்
சந்தித்துள்ளார்.
முன்னதாக,
20இற்கும் மேற்பட்ட
நாடுகளின் இராஜதந்திரிகள்
பங்கேற்ற கூட்டம்
அலரி மாளிகையில்
நடந்திருந்தது. அதில் சீனத் தூதுவர் பங்கேற்கவில்லை.
சீன
அதிபர் ஷி
ஜின்பிங் கொடுத்தனுப்பிய
வாழ்த்துச் செய்தியை, மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று சீனத் தூதுவர்
கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment