சஜீத் பிரேமதாஸ தலைமையில் பெரும்பான்மையை
நிரூபித்து மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என
ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் ஒன்றுபட்டு நம்பிக்கை
அரசியல் களத்தில் உச்சபரபரப்பு தோன்றியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சிக்குள் சிலர்
சஜீத் பிரேமதாஸவை பிரதமராக்க ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சிக்குள் தலைவர் பதவியில் முரண்பாடு ஏற்படுள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை தலைவராக நியமிக்க உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி பெரும் பான்மையை நிரூபித்துக் காட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சஜீத் பிரேமதாஸவை பிரதமராக்க முடிவு செய்துள்ளனர்.
சமீபகாலமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரம் அடைந்துள்ளது.
இக்காலகட்டத்தில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்கும் பட்சத்தில் சுமூகமாக செயல்படுவதில் சிக்கல் உள்ளது. எனவே சஜீத் பிரேமதாஸ தலைமையில் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் அரசு அமைக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் நம்புகின்றனர்.
இதேநேரத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கவில்லை. கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கருதுகின்றனர்.
சஜித் பிரேமதாஸ முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மகனார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment