ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை
சர்வதேசத்திற்கு கேலிக்கூத்தாகியுள்ள இலங்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அனைத்துலக அரசியலில் இலங்கையை கேலிக்கூத்தாக்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை எதேச்சையாக இடம்பெறவில்லை, அது ஒரு அரசியல் சூழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நிகழ்த்திய உரையில், எந்த புதிய விடயங்களும் காணப்படவில்லை, மாறாக பல கேள்விகளையே எழுப்பியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்றுள்ள பிரச்சினை மகிந்தவை பிரதமராக ஏற்றுக்கொள்வதோ , அல்லது ரணிலை அங்கீகரிப்பதோ அல்ல , ஜனநாயகத்தை பாதுகாப்பது எப்படி என்பதே !
அரசியல் அமைப்பிற்கு விரோதமாக , முற்று முழுதான ஜனநாயக மரபு மீறல் நடந்திருக்கிறது என்பதை புத்திஜீவிகள் ஒருமித்த குரலில் கூறிக் கொண்டிருக்கிறார்கள் .
பாராளுமன்ற சம்பிரதாயம் , அரசியல் அமைப்பு என்பன தூக்கி எறியப்பட்டது மட்டுமல்லாமல் , காட்டு தர்பார் அடாவடித்தனங்களும் , சண்டித்தனம் மிக்க கீழ்த்தர வார்த்தை வீசல்களும், அமைச்சுகள் , அலுவலகங்கள் முற்றுகை இடப்படுவதும் , பலவந்த வெளியேற்றங்கள் , கூச்சல் குழப்பங்கள் என்று அக்கிரமம் தலைதூக்கி இருக்கிறது .
ஒரு அப்பாவியின் உயிர் மட்டும் இதுவரை போயுள்ளது . அது தொடராதிருக்க வேண்டும் .
" பாராளுமன்றம் நினைத்தவுடன் மூடுவதற்கும் , திறப்பதற்கும் ஒரு கக்கூஸ் அல்ல " என்று JVP தலைவர் அனுரா குமார திசாநாயக குறிப்பிட்டுள்ளதுடன் , உடனடியாக பாராளு மன்றத்தை கூட்டி தீர்வுகாணுமாறும் எழுத்துமூலம் வேண்டியுள்ளார் .
0 comments:
Post a Comment