புதிய அமைச்சரவையில் நிதி, பொருளாதார
விவகாரங்களை வசப்படுத்தினார் மஹிந்த
12 அமைச்சரவை
அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி
அமைச்சர்கள் இருவரும் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி
செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின்
முன்னிலையில் பதவியேற்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
முன்னிலையில் நடந்த
பதவியேற்பு நிகழ்வில், புதிய
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி மற்றும்
பொருளாதார விவகார
அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
போக்குவரத்து
மற்றும் சிவில்
விமான சேவைகள்
அமைச்சராக நிமல்
சிறிபால டி
சில்வா பதவியேற்றுள்ளார்.
புதிய வெளிவிவகார
அமைச்சராக கலாநிதி
சரத் அமுனுகம
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய
தேசியக் கட்சியைச்
சேர்ந்தவர்களான விஜேதாச ராஜபக்சவுக்கு கல்வி உயர்கல்வி
அமைச்சர் பதவியும்,
வசந்த சேனநாயக்கவுக்கு
சுற்றுலத்துறை மற்றும் வன வாழ் உயிரினங்கள்
அமைச்சர் பதவியும்
வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய
தேசியக் கட்சியைச்
சேர்ந்தவர்களான ஆனந்த அளுத்கமகே, சுற்றுலாத்துறை மற்றும்
வன வாழ்
உயிரினங்கள் பிரதியமைச்சராகவும், வடிவேல்
சுரேஷ், பெருந்தோட்டக்
கைத்தொழிற்றுறை இராஜாங்க அமைச்சராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீள்குடியேற்ற
மற்றும் புனர்வாழ்வு,
வடக்கு அபிவிருத்தி,
இந்து விவகார
அமைச்சராக, ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தா, நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்களது
பெயர் விபரங்கள்
பின்வருமாறு :-
அமைச்சரவை
அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
பிரதமர்
கௌரவ மஹிந்த
ராஜபக்ஷ - நிதி
மற்றும் பொருளாதார
அலுவல்கள் அமைச்சர்
கௌரவ
நிமல் சிறிபால
டி சில்வா
- போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்
அமைச்சர்
கௌரவ
கலாநிதி சரத்
அமுனுகம - வெளிநாட்டலுவல்கள்
அமைச்சர்
கௌரவ
மஹிந்த சமரசிங்க
- துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர்
கௌரவ
மஹிந்த அமரவீர
- விவசாய அமைச்சர்
கௌரவ
ரஞ்சித் சியம்பலாபிட்டிய
- மின்வலு மற்றும்
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர்
கௌரவ
கலாநிதி விஜயதாச
ராஜபக்ஷ
- கல்வி மற்றும்
உயர் கல்வி
அமைச்சர்
கௌரவ
விஜித் விஜயமுனி
சொய்ஸா - மீன்பிடி,
நீரியல் வள
அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்
கௌரவ
ஆறுமுகம் தொண்டமான்
- மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும்
சமூக அபிவிருத்தி
அமைச்சர்
கௌரவ
டக்ளஸ் தேவானந்தா
- மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு
அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள்
அமைச்சர்
கௌரவ
பைசர் முஸ்தபா
- மாகாண சபைகள்,
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
கௌரவ
வசந்த சேனாநாயக்க
– சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்
Hon Mahinda Rajapaksa: Minister
of Finance and Economic Affairs
Hon. Nimal Siripala de Silva:
Minister of Transport and Civil Aviation
Hon. Dr. Sarath Amunugama:
Minister of Foreign Affairs
Hon. Mahinda Samarasinghe:
Minister of Ports and Shipping
Hon. Mahinda Amaraweera: Minister
of Agriculture
Hon. Ranjith Siyambalapitiya:
Minister of Power and Renewable Energy
Hon. Dr. Wijeyadasa Rajapakshe:
Minister of Education and Higher Education.
Hon. Wijith Wijayamuni Zoysa:
Minister of Fisheries & Aquatic Resources Development and Rural Economic
Affairs
Hon. Faiszer Musthapha: Minister
of Provincial Councils, Local Government, and Sports
Hon. Douglas Devananda: Minister
of Resettlement, Rehabilitation, Northern Development, & Hindu Religious
Affairs
Hon. Arumugam Thondaman: Minister
of Hill Country New Villages, Infrastructure and Community Development.
Hon. Vasantha Senanayake:
Minister of Tourism and Wildlife
Hon. Suresh Vadivel: State Minister
of Plantation Industries
Hon. Ananda Aluthgamage: Deputy
Minister of Tourism and Wildlife.
0 comments:
Post a Comment