“அரசியல் எனக்கு சலிக்கிறது விடைபெற அழைக்கிறது
மனோ கணேசனின் பதிவால் பலர் அதிர்ச்சி
அரசியலில் இருந்து
விடைபெறப் போகின்றாரா மனோ கணேசன்?



தற்போது இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற விடயம் புரியாத புதிராகவே உள்ளது.

யார் யாருடைய பக்கம் சேரப் போகின்றார்கள்? என்ன பேசப் போகின்றார்கள் என்பதும் பலத்த எதிர்பார்ப்பாகவே உள்ளது.

அந்த வகையில் நேற்று காலை ரணிலை சந்தித்தவர்கள் மாலை நேரத்தில் மஹிந்தவுடன் இணைந்த சம்பவங்களும் உண்டு. அவர்களுக்குஅமைச்சுப்பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், நல்லாட்சி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அமைச்சரவை முழுவதும் கலைக்கப்பட்டு நேற்று புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த அனைவரது பதவிகளும் பறிக்கப்பட்ட நிலையில், தமது எதிர்கால அரசியல் பயணம் எப்படி இருக்கப் போகின்றது என்பது பற்றி அனைவரும் சிந்தித்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தனது முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை கண்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், பதில் பதிவையும் இட்டுள்ளனர்.

இதில் என் வரலாற்றையும், என்னையும் மறந்தோருக்கும் நான் யாரென இப்போ தெரிந்திருக்கும்....

.ஆனால் அரசியல் எனக்கு சலிக்கிறது விடைபெற அழைக்கிறது..!!!”. என்ற பதிவை மனோ கணேசன் இட்டுள்ளார்.

எனினும் இந்த பதிவிற்கு பலர் பதில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
·         வெட்கம்,சூடு ,சுரனை,மான ரோசம் அற்றவர்கள் விலைபோனற்கு நீங்கள் ஏன் போக வேண்டும் நீங்கள் உங்கள் வழி தொடருங்கள்.
·         நேர்மையான தலைமைகள் என்றும் ஒதுங்கி விடக் கூடாது. தயவு செய்து தமிழ் மக்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் அரசியலில் இருந்து விலகி விடாதீர்கள்.
·         தோழா, போர்க்கழத்தில் அரிச்சுணன் சலிக்கலாமா? தயவு செய்து உங்கள் மாண்புக்கும் வீரத்துக்கும் ஒவ்வாத இந்த சலிப்புதரும் குறிப்பை அகற்றி விடுங்கள்.
·         எமது தமிழ் இனத்துக்கு கிடைத்த சிறந்த அரசியல் வாதி உங்களை போல் ஒருவர் கிடைப்பது. கஸ்டம் நீங்கள் இனிதான் அரசியலுக்கு வேண்டும்.
·         நீங்கள் சலிக்க கூடாது தலைவா ...தமிழர்களின் பலம் ,ஆயுதம் நீங்கள் தான் ,உங்கள் தலைமையில் தான் விரைவில் தமிழனுக்கு விடிவு
·         உண்மையும் நேர்மையும் தூரமாகிப்போன தேசத்தில் ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் உழைப்பவர்கள் சலிப்படைவதும் தவிர்க்க முடியாததே.
·         ஆனாலும் விடைபெறும் அழைப்பை ஏற்கமறுப்பதே தேசபக்தனின் தனித்தன்மை
·         இது சலித்து விடைபெறும் சந்தர்ப்பமல்ல தலைவா விழித்து நடைபோடும் சாமத்தியம்
·         அரசியல் குழப்பம் கவலையாகவுள்ளது. சலித்து வெளியேறாதீர்கள். தொடர்ந்து ரணிலுடன் நில்லுங்கள் போராடுங்கள். கடந்த சுதந்திரத்தை பெறவேண்டும்.
·         நீங்கள் அரசியலை விட்டு செல்லாதீர்கள்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top