பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை
நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும்
அரசியல் நெருக்கடியால்
பெரும் இரத்தக்களறியே ஏற்படும்
சபாநாயகர் கடும் எச்சரிக்கை



அரசியலின் பெரும் நெருக்கடி உடனடியாக அரசியல் சட்ட ரீதியாகத் தீர்க்கப்படவில்லையெனில் நிச்சயம் தெருக்களில் இரத்தக்களரி நிலையே ஏற்படும் என்று பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பதை உடனடியாக வாபஸ் பெற்று உறுப்பினர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாகச் செயல்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரியா வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றம் மூலம் இதற்குத் தீர்வு காண வேண்டும், தெருக்களுக்கு இட்டுச் சென்றால் பெரிய இரத்தக்களறியைத்தான் சந்திக்க வேண்டி வரும்என இன்று செய்தியாளர்களிடம் சபாநாயகர் ஜெயசூரியா தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க பதவியை அனாவசியமாகப் பறித்து மஹிந்த ராஜபக்ஸவை நியமித்ததால் இலங்கை அரசியலில் பெரிய நெருக்கடி ஏற்பட்டு மோதலில் ஒருவர் இறந்துள்ளார். ஆகவே ரணில் தன் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று சிறிசேனவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவும், “தற்போது பெரும் வெற்றிடமே உள்ளது, நாட்டை யாரும் ஆளவில்லை.  எனவேதான் நாடாளுமன்றத்தைக் கூட்டி உடனடியாக எனக்கு இருக்கும் ஆதரவை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோருகிறேன். நான் தான் இன்னமும் பிரதமராக இருக்கிறேன், எனக்குத்தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top