ஹக்கீம், றிசாத், மனோ ரணிலுக்கு ஆதரவு
டக்ளஸ், தொண்டா மஹிந்தவின் பக்கம்



கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், முஸ்லிம் கட்சிகள், பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடருவதற்கு, தொடர்ந்தும் ஆதரவளிக்க, முன்வந்துள்ளன.

ரவூப் ஹக்கீம்  தலைமையிலான, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு  தெரிவித்துள்ளன.

இந்தக் கட்சிகளின் தலைவர்கள், இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பங்கேற்றனர்.

அதேவேளை, ஒரு ஆசனத்தைக் கொண்ட ஈபிடிபியும், இரண்டு ஆசனங்களைக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரசும், ஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top