ரணிலுக்கு மற்றுமொரு பேரிடி!
மஹிந்த அணிக்கு தாவிய துனேஸ்
இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய
தேசிய கட்சியின்
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ்
கங்கந்த சுற்றாடல்
துறை இராஜாங்க
அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனக்கான
நியமன கடிதத்தை
அவர் ஜனாதிபதியிடம்
இருந்து இன்று
மாலை பெற்றுக்கொண்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக
இன்று காலை
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன மற்றும்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை துனேஸ்
கங்கந்த சந்தித்து
பேசியிருந்தார். இந்நிலையிலேயே, அவருக்கு இன்று இராஜாங்க
அமைச்சு பதவி
வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
கடந்த வெள்ளிக்கிழமை
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டார். இதனையடுத்து
கொழும்பு அரசியலில்
பெரும் குழப்பநிலை
ஏற்பட்டுள்ளது.
இதனால்
நாடாளுமன்றில் பெரும்பான்மையை காட்டுமாறு கோரப்பட்டு வந்த
நிலையில், நாடாளுமன்றம்
எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்து
வைக்கப்பட்டுள்ளது.
இதனால்,
நாடாளுமன்றில் பெரும்பான்மையை காண்பிக்க ரணில் மற்றும்
மஹிந்த தரப்பினர் கடுமையான
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கடந்த
இரண்டு நாட்களாக
கட்சித்தாவல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றது.
ஏற்கனவே,
ஐக்கிய தேசிய
கட்சியில் இருந்து
நான்கு பேர்
மஹிந்த அணிக்கு ஆதரவு
வழங்கியுள்ளதுடன், அதில் மூவர்
அமைச்சு பதவிகளையும்
பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில்,
தற்போது ஐக்கிய
தேசியக் கட்சியின்
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ்
கங்கந்த மஹிந்த அணிக்கு
ஆதரவு தெரிவித்துள்ளதுடன்,
அமைச்சு பதவியையும்
பெற்றுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment