இலங்கையில் தொங்கு நிலையில் பாராளுமன்றம்!
பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்?
ரணிலா? மஹிந்தவா?
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த பிரதான கட்சிகள்
இரண்டும் பிளவுபட்டுள்ள நிலையில், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளது.
கடந்த பொது தேர்தல் முடிவுகளுக்கமைய, தற்போது அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான
பெரும்பான்மையை எந்தவொரு கட்சியும் தற்போது கொண்டிருக்கவில்லை.
எதிர்க்கட்சியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது வேறு
சில கட்சிகளை இணைந்து கொண்டால் மாத்திரமே பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியும்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் 6 கட்சிகள் மாத்திரமே ஏற்றுக் கொண்டவைகளாகும்.
அதில் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை பெற்றுள்ளது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களை பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி 16 ஆசனங்களை பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி
6 ஆசங்களையும், ஈழ தமிழர் ஜனநாயக கட்சி ஒரு ஆசனத்தை, முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும்
பெற்றுள்ளது.
இதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள 106 ஆசனங்களில் ரிசாட் பதியூதின் தலைமை வழங்கும்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 5 உறுப்பினர்களையும், ரவூப் ஹக்கிம் தலைமைத்துவம் வழங்கும் முஸ்லிம்
காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும் உட்படுத்தி மேலும் சில கட்சிகள் உள்ளடங்குகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அதே நிலைமை காணப்படுகின்றது.
அதில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தன தலைமைத்துவம் வழங்குகின்ற
மக்கள் ஐக்கிய முன்னணி உட்பட சில கட்சிகளின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள்
முன்னணியின் கீழ் உள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்
உள்ள 95 க்கு மேலதிகமாக,
நாடாளுமன்ற
பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 18 ஆசனங்கள் அவசியமாக உள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய தேசிய கட்சியை
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர் 106 பேரின் ஆதரவு உள்ள போதிலும், பெறும்பான்மையை வெளிப்படுத்துவதற்கு 7 ஆசனங்கள் அவசியமாக உள்ளது.
எப்படியிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியை
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வசந்த சேனாநாயக்க மற்றும் ஆனந்த அலுத்கமகே மஹிந்த
ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
ரிஷாட் பதியூதின் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் ரணில்
விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
அரசாங்கம் நடத்தி செல்வதற்கு மஹிந்த ராஜபக்சவுக்கு அல்லது
ரணில் விக்ரமசிங்கவுக்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும்.
அடுத்து வரும் சில நாட்களில் கட்சிகளின் கூட்டணி தொடர்பான
தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் பிரதமர் பதவியில் இருந்து ரணில்
விக்ரமசிங்க அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்டுவதாக ரணில் சவால் விடுத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment