கம்பெரலிய கிராம அபிவிருத்தி திட்டத்தை
தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
2019ஆம் ஆண்டுக்கென 48 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
கம்பெரலிய
என்ற துரித
கிராம அபிவிருத்தி
வேலைத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கான நிறுவனங்கள் திணைக்களங்கள் உள்ளிட்டவை ஒதுக்கீடு
செய்யப்பட்ட பின்னர் நேற்றைய தினம் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவின்
தலைமையில் அமைச்சரவைக்கூட்டம்
நடைபெற்றது. இதன் போது கம்பெரலிய என்ற
துரித கிராம
அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது
தொடர்பாக தீர்மானம்
மேற்கொள்ளப்பட்டது.
கம்பெரலிய
என்ற வேலைத்திட்டத்தின்
கீழ் கிராமங்களில்
உள்ள குளங்களை
புனரமைத்தல் கிராம வீதிகளை நவீன மயப்படுத்தல்
பாடசாலைகளுக்கு இயற்கை கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்
கொடுத்தல். பாடசாலை விளையாட்டு மைதானங்கள் வாராந்த
சந்தை மற்றும்
பசுமை பூங்காக்களை
அமைத்தல் மின்சார
வசதிகளை பெற்றுகொடுத்தல்,
மதவழிபாட்டு தலங்களை புனரமைத்தல், வீடமைப்பு
அபிவிருத்தி மற்றும் காணி உறுதிகளை வழங்குதல்
போன்ற திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்காக 2018ஆம் ஆண்டுக்காக
20 பில்லியன் ரூபா மானியம் அமைச்சரவையினால்
ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
ஒருதேர்தல்
தொகுதிக்கு தலா 300 மில்லியன் ரூபா
வீதம் வழங்கி இந்த அபிவிருத்தி
வேலைத் திட்டப்பணிகளை முன்னெடுப்பதற்காக
2019ஆம் ஆண்டுக்கென
48பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு நிதி
மற்றும் ஊடகத்துறை
அமைச்சர் மங்களசமரவீர
அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு
அமைச்சரவைஅங்கிகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment