90 வருட பாடசாலை வரலாற்றை மாற்றி அமைத்த
வவுனியா அல்- இக்பால் மஹா வித்தியாலய  மாணவிகள்

வவுனியா அல்- இக்பால் ஹா வித்தியாலயத்தின் 90 வருட வரலாற்றை மாற்றியமைத்து சாதனை பெறுபேற்றினை முஹம்மட் லெப்பை பாத்திமா றிப்னா என்ற மாணவி பெற்றுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இதில் வர்த்தகப் பிரிவில் 3 சித்திகளைப் பெற்ற மாணவி முஹமட் லெப்பை பாத்திமா றிப்னா மாவட்ட மட்டத்தில் 9 ஆவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியா, சூடுவெந்தபுலவு அல்- இக்பால் மஹா வித்தியாலயம் ஆரம்பமாகி 90 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் தோற்றிய குறித்த மாணவி பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக வர்த்தகப் பிரிவில் 3 சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டடத்தில் 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அத்துடன் கலைப்பிரிவில் ஜஹ்பர் பஸ்லிஹா என்ற மாணவி 2பி சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 26 ஆவது நிலையைப் பெற்றுள்ளார்.

பின்தங்கிய குறித்த பாடசாலை மாணவிகளின் பெறுபேற்றினால் அப்பாடசாலை மட்டுமன்றி அக்கிராம மக்களும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top