மஹிந்த தொடர்பான பல ரகசியங்களை
அம்பலப்படுத்தவுள்ள மைத்துனர்!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொடர்பான முக்கிய தகவல்களை அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய அம்பலப்படுத்தவுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பணச்சலவை மற்றும் வீசா குற்றங்கள் தொடர்பில் ஜாலிய விக்கிரமசூரியவின் மீது அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.

பின்னர் தமது ராஜதந்திர வாய்ப்புக்களை பயன்படுத்தி அங்கிருந்து இலங்கைக்கு வரமறுத்து விட்டார்.

இந்தநிலையில் அமெரிக்காவின் குடியுரிமையை கொண்டுள்ள அவருக்கு எதிராக அமரிக்காவிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த வாரத்தில் அவர், தமது மைத்துனரான மஹிந்த ராஜபக்ஸவின் 2005- 2015ஆம் காலப்பகுதி அரசாங்கம் தொடர்பில் முக்கிய இரகசிய தகவல்களை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்களை வெளியிடும் பட்சத்தில் அவர் சிறைக்கு செல்வது தவிர்க்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதன்போது தாமும் ஏனையவர்களும் செய்த தவறுகளை விக்கிரமசூரிய வெளிப்படுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் ஜாலிய விக்கிரமசூரியவுக்கும் அமெரிக்காவின் சட்டத்தரணிகளுக்கும் இடையிலான மின்னஞ்சல் பரிமாற்றங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இதனைக்கொண்டு மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள பலர் தொடர்பான விடயங்களை விக்கிரமசூரிய வெளியிடுவார் என்று அறியமுடிகிறது..


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top