பதவியை ஏற்றதும் மஹிந்தவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

சம்பந்தரின் சூழ்ச்சியா?




எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தனது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று காலை பணியை ஆரம்பித்த போதிலும் அவரது பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு ஸ்ரீமத் மாகஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் அவர் பணியை ஆரம்பித்துள்ளார்.

பணியை ஆரம்பித்த பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த நான்கு வருட காலப்பகுதிக்கு பின்னர் இலங்கையின் அனைத்து துயரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்கட்சியை பெற்றுக்கொண்டுள்ளது.

நாட்டின் தற்போதைய மிக முக்கியமான பிரச்சனைகளாக காணப்படும் விவசாயத்துறை மற்றும் சரிவடைந்து செல்லும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியுள்ளோம் அத்துடன் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் விழிப்புடன் உள்ளோம்..

அரசாங்கத்தின் செயல்பாடுகளை விழிப்புடன் கண்காணிப்பதுடன் அதன் செயற்பாடுகளை ஆக்கப்பூர்வமான முறையில் விமர்சிப்போம். இறுதியாக, எதிர்கட்சி என்ற வகையில் முறையாக செயல்படவுள்ளவரை இந்த நாடு பெற்றுள்ளது என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டு வெளியேறியுள்ளார்.

எப்படியிருப்பினும் இதுவரையில் எதிர்க்கட்சி தலைவர் செயலாளர் நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதன் காரணமாக தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஸசவின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை சம்பந்தரின் சூழ்ச்சி என மஹிந்த தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top